அமெரிக்க வான்வழித் தாக்குதலில் அல்-காய்தா தளபதி சாவு

யேமனில் அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தளபதி பலியானார்.

யேமனில் அமெரிக்கா நிகழ்த்திய வான்வழித் தாக்குதலில் அல்-காய்தா பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தளபதி பலியானார்.

இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புப் படையின் மத்திய கட்டுப்பாட்டு மையம் (சென்ட்காம்) வாஷிங்டனில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பது:
யேமனின் ஷப்வா மாகாணத்தில் அல்}காய்தா பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் குறி வைத்து அமெரிக்க ஆளில்லா விமானங்கள் வான்வழித் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. கடந்த ஜூன் 16}ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் யேமனில் அல்}காய்தா கட்டுப்பாட்டுப் பகுதிக்கான அமீராகச் செயல்பட்டு வந்த அபு கத்தாப் அல்}அவ்லாக்கி கொல்லப்பட்டார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருடைய துணை தளபதிகளாகச் செயல்பட்டு வந்த வேறு இரு பயங்கரவாதிகளும் அந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
தெற்கு யேமன் பகுதியில் பதற்ற நிலை நீடிக்கும் விதமாக அபு கத்தாப் அல்}அவ்லாக்கி செயல்பட்டு வந்தார்.
அரசு நிலைகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவது மட்டுமல்லாமல், அப்பாவிப் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தவும் அவர் திட்டமிட்டு வந்தார். அரபு தீபகற்ப பகுதிக்கான அல்}காய்தா பிரிவுடன் (ஏ.கியூ.ஏ.பி.) அவர் நெருங்கிச் செயல்பட்டு வந்தார்.
அமெரிக்காவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக ஏ.கியூ.ஏ.பி. திகழ்ந்து வருகிறது. ஏ.கியூ.ஏ.பி.யை இலக்கு வைத்து, இவ்வாண்டு தொடக்கம் முதல் எண்பதுக்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதலை அமெரிக்க ராணுவம் மேற்கொண்டுள்ளது என்று அமெரிக்க பாதுகாப்புப் படையின் மத்திய கட்டுப்பாட்டு மையம் வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களுக்கு சதித் திட்டமிட்ட அல்}காய்தாவின் அன்வர் அல்}அவ்லாக்கிக்கும், இப்போது கொல்லப்பட்ட அபு கத்தாப் அல்}அவ்லாக்கிக்கும் எந்த உறவும் இல்லை என்று அமெரிக்கா கருதுகிறது.
அமெரிக்காவில் பிறந்த அன்வர் அல்}அவ்லாக்கி, யேமனின் அல்}ஜவாஃப் மாகாணத்தில் 2011}ஆம் அமெரிக்கா நிகழ்த்திய தாக்குதலின்போது பலியானார். அவருடைய மகனும், மகளும் அமெரிக்க தாக்குதல்களில் பலியாகினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com