கத்தார் மீதான தடையை நீக்க 13 நிபந்தனைகள்

கத்தார் மீது சவூதி உள்ளிட்ட நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கத்தார் மீது சவூதி உள்ளிட்ட நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கத்தார் விவகாரத்தில் சமரசம் ஏற்படுத்த முயற்சி செய்து வரும் குவைத், நிபந்தனைகள் அடங்கிய பட்டியலை கத்தார் அரசிடம் அளித்தது. அதன் விவரம்:
கத்தார் தலைநகர் தோஹாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அல்}ஜஸீரா செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்தை அரசு முடக்க வேண்டும், ஈரானுடனான உறவுகளை கத்தார் முறித்துக் கொள்ள வேண்டும், ஒரு பெரும் தொகையை சவூதி உள்ளிட்ட நாடுகளுக்கு கத்தார் அளிக்க வேண்டும் என்பது அந்தப் பட்டியலில் மிகவும் குறிப்பிடத்தக்கவை.
மேலும், கத்தாரில் உள்ள துருக்கி ராணுவ தளத்தை மூடுவது, முஸ்லிம் சகோதரத்துவம் இயக்கத்துடனான உறவுகளைத் துண்டித்துக் கொள்வது, ஹிஸ்புல்லா, அல்}காய்தா, இஸ்லாமிய தேச பயங்கரவாத இயக்கங்களுடன் உள்ள தொடர்புகளைத் துண்டித்துக் கொள்வது உள்ளிட்ட 13 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற கத்தாருக்கு 10 நாட்கள் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அல்}ஜஸீரா செய்தித் தொலைக்காட்சிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சவூதி முன்னரே தெரிவித்திருந்தது. அல்}ஜஸீராவை முடக்க வேண்டும் என்றும் சவூதி நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தது. ஆனால் கத்தார் அதனை நிராகரித்தது. இந்த நிலையில், நிபந்தனைகள் அடங்கிய பட்டியலில் அல்}ஜஸீரா முடக்கம் இடம் பெற்றுள்ளது.
தற்போது வழங்கப்பட்ட பட்டியல் குறித்து கத்தார் அரசு எந்தக் கருத்தும் வெளியிடவில்லை. தங்களுக்கு எதிராகத் தடைகளை விதித்த நாடுகள் அவற்றை நீக்குவதாக அறிவித்தால் மட்டுமே எந்தவிதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவோம் என்று கத்தார் ஏற்கெனவே திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது.
பயங்கரவாதத்துக்குத் துணை போவதாக குற்றம் சாட்டி, சவூதி உள்ளிட்ட 7 நாடுகள் கத்தார் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது மட்டுமல்லாமல், அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்வதாகவும் கடந்த ஜூன் 5}ஆம் தேதி அறிவித்தன. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இது பெரும் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com