ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் நீட்டிப்பு: ஐரோப்பிய யூனியன் முடிவு

ரஷியா மீது விதித்த பொருளாதாரத் தடைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்ததாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது.
ரஷியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் நீட்டிப்பு: ஐரோப்பிய யூனியன் முடிவு

ரஷியா மீது விதித்த பொருளாதாரத் தடைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு செய்ததாக ஐரோப்பிய யூனியன் அறிவித்தது.
ஐரோப்பிய யூனியன் தலைவர் டொனல்ட் டஸ்க் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து அவர் தெரிவித்தது:
ஐரோப்பிய யூனியன் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் பிரஸ்ùஸல்ஸில் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் ரஷியா மீதான பொருளதாரத் தடைகளை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் முடிவு எடுக்கப்பட்டது. முடிவு அனைவராலும் ஒருமனதாக ஏற்கப்பட்டது. முறையான அறிவிப்பு வரும் ஜூலை மாதம் வெளியாகும். புதிய தடைக் காலம் ஜூலை 31-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம், மலேசிய ஏர்லைன்ஸýக்கு சொந்தமான பயணிகள் விமானம் கிழக்கு உக்ரைன் பகுதி வான்வெளியில் பறந்து கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. உக்ரைன் அரசை எதிர்த்து சண்டையிட்டு வந்த கிளர்ச்சியாளர்கள் அந்த விமானத்தை ஏவுகணை வீசித் தாக்கி வீழ்த்தினர். அந்த விமானத்தில் இருந்த 283 பயணிகளும் 15 ஊழியர்களும் பலியாகினர்.
அது உக்ரைனின் போர் விமானம் என்ற எண்ணத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அந்த விளக்கத்தை ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட உலக நாடுகள் ஏற்கவில்லை.
ரஷிய எல்லையையொட்டிய கிழக்கு உக்ரைன் பகுதியில் ரஷிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்கள் தன்னாட்சி கோரி கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு ரஷியா கனரக ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அளித்து வருகிறது.
கிழக்கு உக்ரைனில் இரு பிரதேசங்களை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள கிளர்ச்சியாளர்கள், உக்ரைனிடமிருந்து சுதந்திரம் பெற்ôக அறிவித்து, அங்கு தேர்தலும் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும், கிளர்ச்சியாளர்கள் மீது ரஷியா எந்த நடவடிக்கையும் எடுக்காததை ஐரோப்பிய யூனியன் கண்டித்தது.
இதைத் தொடர்ந்து ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது. ரஷியா மீதான தடைகள் அந்த நாட்டுக்கு மட்டுமல்லாமல், ஐரோப்பிய நாடுகளுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும் அமெரிக்காவின் அழுத்தத்தினால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.
கிழக்கு உக்ரைன் பகுதியில் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுவதை நிறுத்துவது, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை உக்ரைன் அரசிடம் திரும்ப ஒப்படைப்பது உள்ளிட்டவற்றை ரஷியா உறுதி செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய யூனியன் வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, ரஷியா, ஜெர்மனி, பிரான்ஸ் முன்னிலையில், உக்ரைன் அரசும், கிளர்ச்சியாளர்கள் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. எனினும் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியானது தொடர்ந்து அவர்கள் வசமே இருந்து வருகிறது. சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டபோதிலும், எல்லைப் பகுதிகளில் ஏறக்குறைய தினசரி துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து வருகிறது.
முன்னதாக, உக்ரைனின் கிரீமியா பகுதியை ரஷியா இணைத்துக் கொண்டது தொடர்பாக ரஷியா மீது ஐரோப்பிய யூனியன் விதித்திருந்த பொருளதாரத் தடைகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதென கடந்த வாரம் முடிவு செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது. அதைத் தொடர்ந்து, தற்போது, கிழக்கு உக்ரைன் விவகாரம் தொடர்பான பொருளாதாரத் தடைகளும் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.
ரஷியாவுடன் ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல பொருள்களின் ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபடுதல், தொழில் முதலீடுகள், சுற்றுலா சேவைகளில் ஈடுபடுதல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com