ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வரைவுத் திட்டம்: இந்தியா-ரஷியா கையெழுத்து

பாதுகாப்புத் துறையில் இந்தியாவும், ரஷியாவும் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியும், ரஷிய அமைச்சர் செர்ஜி சோய்குவும் கையெழுத்திட்டனர்.

பாதுகாப்புத் துறையில் இந்தியாவும், ரஷியாவும் இரு தரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லியும், ரஷிய அமைச்சர் செர்ஜி சோய்குவும் கையெழுத்திட்டனர்.
இந்தியா-ரஷியா இடையே ராணுவத் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஆணையத்தின் 17-ஆவது கூட்டம், ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி சோய்கு பேசியதாவது:
இரு நாடுகளின் ராணுவ வலிமையை அதிகரிக்கச் செய்யவும், ராணுவம் தொடர்பான விஷயங்களில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடிவு செய்திருக்கிறோம். இந்தியா- ரஷியா இடையே ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வரைவுத் திட்டத்தை இரு நாடுகளைச் சேரந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தயாரித்திருக்கிறார்கள். இது, இரு நாட்டு ராணுவத்தை வலுப்படுத்தும் திட்டத்துக்கான அடிப்படை ஆவணமாக இருக்கும் என்று செர்ஜி சோய்கு கூறினார்.
கூட்டத்தின் முடிவில், ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் அருண் ஜேட்லியும், செர்ஜி ஷோய்குவும் கையெழுத்திட்டனர்.
இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் ரஷியா முக்கிய கூட்டாளியாக உள்ளது.
முன்னதாக, மாஸ்கோவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஜேட்லி பேசுகையில், ""அதிநவீன பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தியில், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட ரஷிய நிறுவனங்கள் முன்வர வேண்டும்'' என்று அழைப்பு விடுத்திருந்தார்.
இந்தியா-ரஷியா இடையேயான வருடாந்திர கூட்டம், ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது. பிரதமர் மோடியும், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினும் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், இரு நாடுகளும் இணைந்து ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்து, இரு நாட்டு ராணுவ வலிமையை அதிகரிக்கச் செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி ரஷியா சென்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com