மோடி உண்மையான நண்பர்: டொனால்ட் டிரம்ப்

பிரதமர் நரேந்திர மோடியை தனது உண்மையான நண்பர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
மோடி உண்மையான நண்பர்: டொனால்ட் டிரம்ப்

பிரதமர் நரேந்திர மோடியை தனது உண்மையான நண்பர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
3 நாள் பயணமாக அமெரிக்காவுக்கு ஞாயிற்றுக்கிழமை வந்துள்ள மோடியை வரவேற்று அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் டிரம்ப் கூறியுள்ளதாவது:
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை வரவேற்கத் தயாராக இருக்கிறேன். உண்மையான நண்பரான அவருடன் முக்கிய விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்து மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கையில், "அதிபர் டிரம்ப்பின் வரவேற்புக்கு மிக்க நன்றி. அவரை சந்திப்பதற்கும், முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பதற்கும் மிகுந்த ஆவலுடன் உள்ளேன்' என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் மோடிக்காக சிறப்பான இரவு விருந்து நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்ய டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்நாட்டில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு முதல் முறையாக மோடிக்குத்தான் வெள்ளை மாளிகையில் இத்தகைய சிறப்பு விருந்து அளிக்கப்படுகிறது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதாவது:
வெள்ளை மாளிகையில் வெளிநாட்டுத் தலைவர் ஒருவருக்கு அதிபர் டிரம்ப் சிறப்பு விருந்து அளிப்பது இதுவே முதல் முறை. எனவே, மோடியின் வருகையை முன்னிட்டு ஆர்வத்துடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதன் மூலம் டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது போதிய கவனம் செலுத்தவில்லை என்று கூறப்பட்டு வந்தது தவறு என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடனான உறவுக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com