இந்திய பதுங்கு குழிகளை அழித்தது சீனா: சிக்கிம் எல்லையில் பதற்றம்!

சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை சீன ராணுவம் அழித்துள்ளதை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய பதுங்கு குழிகளை அழித்தது சீனா: சிக்கிம் எல்லையில் பதற்றம்!


சிக்கிம் எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை சீன ராணுவம் அழித்துள்ளதை அடுத்து அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்திய பக்தர்கள் சீன எல்லையில் உள்ள மானசரோவர் கைலாய மலைக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். வழியில் உள்ள பாலம் உடைந்துவிட்டதாகக் கூறி அதற்கு சீனா திடீரென அனுமதி மறுத்தது. இந்த பிரச்சினை தொடர்பாக இந்திய அரசுடன் பேசி வருவதாக, சீனா தெரிவித்தது.

இந்த நிலையில் சிக்கிம் மாநிலம், டோகா லா அருகேயுள்ள லால்டென் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்து,  2 இந்திய ராணுவ பதுங்கு குழிகளை அழித்துள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 10 நாட்களுக்கு முன் நடந்துள்ளது. இந்திய ராணுவத்தினர் மனித சுவராக நின்று அவர்களைத் தடுத்துள்ளனர். இதன் காரணமாக எல்லை பகுதியில் பதற்றம் உருவாகி உள்ளது. சீன ராணுவத்தின் அத்துமீறலை தடுக்க இந்திய ராணவ வீரர்கள் கடினமாக போராடி வருகின்றனர்.

சீனாவின் தன்னாட்சிப் பிராந்தியமான திபெத்தில் உள்ள கைலாச மானசரோவருக்கு இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் ஏராளமானோர் புனித யாத்திரை செல்கின்றனர். இந்நிலையில் நிகழாண்டில் புனித யாத்திரை செல்வதற்காக, 350 பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களில், 47 பேர் கொண்ட முதல் குழுவினர் கடந்த வாரம் யாத்திரையைத் தொடங்கினர்.

அவர்கள், சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாதுலா கணவாய் வழியாகக் கடந்த 19-ஆம் தேதி செல்ல முயன்றனர். ஆனால், மோசமான வானிலை நிலவியதால் அவர்களால் மேற்கொண்டு பயணத்தைத் தொடர முடியவில்லை. அவர்கள் சிக்கிமில் உள்ள முகாமில் காத்திருந்தனர். பிறகு, அவர்கள் கடந்த 23-ஆம் தேதி பயணத்தைத் தொடர முயன்றபோது, சீன அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால், யாத்திரையைத் தொடர முடியாமல், அவர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி விட்டனர்.

இதனிடையே, கனமழை காரணமாக சாலைகள் பழுதடைந்துள்ளதால், அவற்றைச் சீரமைக்கும் வரை யாத்ரீகள் பயணத்தைத் தொடர முடியாது என்று சீன அதிகாரிகள் விளக்கம் கொடுத்தனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் இருந்து நாதுலா கணவாய் வழியாக கைலாச மானசரோவர் யாத்திரை நடைபெற்று வரும் நிலையில், இந்திய யாத்ரீகர்களை சீன அதிகாரிகள் தடுத்து நிறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஜூன் 20 ஆம் தேதி இரு தரப்பின் மூத்த ராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது, ஆனால், பதற்றம் தொடர்ந்து நிலவி வருகிறது.

இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்னதாக, 2008 நவம்பரில் சீனப் படைகள் சில தற்காலிக இந்திய ராணுவப் பதுங்குகுழிகளை அழித்தன. சிக்கி-பூட்டான்-திபெத் உள்ள டோக்கா லா என்ற அதே இடத்தில் தற்போதைய சம்பவமும் நடத்து வருகின்றனது.

1962 ஆம் ஆண்டு நடந்த இந்தியா-சீனா போருக்கு பிறகு இந்த பகுதி இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கிம் எல்லைக்குள் சாலை அமைக்க முயன்ற சீனாவை தடுத்து நிறுத்தியது இந்திய ராணுவம். நிலைமையை கண்காணிக்க ராணுவத் தளபதி பிபின் ராவத் சிக்கிம் செல்லத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com