அதிகார ஆட்டம் போட்ட கூகுள்: ரூ.645 கோடி அபராதம் விதிக்கவுள்ள ஐரோப்பிய யூனியன்!

ஆன்லைன் விற்பனை துறையில் அதிகாரம் செலுத்த முனைந்த குற்றத்திற்காக, உலகப் புகழ் பெற்ற தேடல் இயந்திர நிறுவனமான கூகுளுக்கு, ஐரோப்பிய யூனியன் ரூ.645 கோடி அபராதம் விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது
அதிகார ஆட்டம் போட்ட கூகுள்: ரூ.645 கோடி அபராதம் விதிக்கவுள்ள ஐரோப்பிய யூனியன்!

லண்டன்: ஆன்லைன் விற்பனை துறையில் அதிகாரம் செலுத்த முனைந்த குற்றத்திற்காக, உலகப் புகழ் பெற்ற தேடல் இயந்திர நிறுவனமான கூகுளுக்கு, ஐரோப்பிய யூனியன் ரூ.645 கோடி அபராதம் விதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

ஐரோப்பிய யூனியனைப் பொறுத்த அளவில் 90 சதவீதமான இணைய தேடுதல்கள் கூகுள் வழியாகத்தான் நடைபெறுகின்றன. எனவே பயனாளர்கள் என்ன விதமான தேடல் முடிவுகளை பார்க்கிறார்கள் என்பதை கட்டுப்படுத்தும் அதிகாரம் மறைமுகமாக கூகுள் நிறுவனத்திடம்தான் உள்ளது.

இந்நிலையில் புதிதாக ஆன்லைன் விற்பனை துறையில் தனது 'கூகுள் ஷாப்பிங்' சேவை மூலம் கால் பதித்த கூகுள் நிறுவனமானது, குறிப்பிட்ட ஒரு பொருள் பற்றிய பயனாளர்களின் தேடலின் பொழுது, இதர விலை மலிவான சேவை நிறுவங்களை பற்றிய தேடல் முடிவுகள் வராமல் தடுப்பதாக குற்றசாட்டுகள் 2010-ஆம் ஆண்டிலேயே எழுந்தது. அத்துடன் ஐரோப்பிய யூனியனின் வியாபார போட்டி ஒழுங்குமுறை ஆணையத்தில் கூகுள் மீது புகாரும் செய்யப்பட்டது.

ஆனால் ஆன்லைன் விற்பனை துறையில் தாங்கள் கால் பதிப்பது சில்லறை விற்பனையாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் நல்லது என்று வாதிட்ட கூகுள், தான் ஏகபோக அதிகாரம் செலுத்தவில்லை என்று மறுத்து வந்தது. வெகு நாட்களாக தொடர்ந்து வந்த இந்த விசாரணையில் இன்று தீர்ப்பு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி ஆன்லைன் விற்பனை துறையில் ஏகபோக அதிகாரம் செலுத்த முனைந்த குற்றத்திற்காக, கூகுளுக்கு, ரூ.645 கோடி அளவில் அபராதம் விதிக்கபடலாம் என்று தெரிகிறது.அத்துடன் தனது சேவையை பிரதானப்படுத்தும் நோக்கத்துடன், இதர சேவை நிறுவனங்கள் பற்றிய தகவல்களை தேடுதலில் காட்டாமல் தடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்படும் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com