சீனாவில் வெள்ளப்பெருக்கு: 34 பேர் பலி

சீனாவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.

சீனாவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

சீனாவின் தென்மேற்குப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரையில் வெள்ளப் பெருக்கில் சிக்கி 34 பேர் உயிரிழந்துள்ளர்.
பாதுகாப்பு கருதி 47 மாவட்டங்களில் வசிக்கும் 4.50 லட்சம் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வெள்ளப் பெருக்கால் பல மாவட்டங்களில் பல்லாயிரக் கணக்கான ஏக்கரிலான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின. பல லட்சம் டாலர் மதிப்புக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 93 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணியில் 3,000 மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மவோக்ஸியான் மாவட்டத்திலுள்ள ஜின்மோ கிராமம் மற்றும் குயங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 62 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. நிலச்சரிவு காரணமாக, சாலை வழியான போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.
ஜின்மோ கிராமத்தில் 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும், 15 பேரைக் காணவில்லை.
மேலும், ஜியாங்ஸி, குய்úஸாகு, ஹியூனான், யூனான் மற்றும் அன்ஹுய் மாகாணங்களைச் சேர்ந்த 22 பேரும் உயிரிழந்தனர்.
யாங்ட்ஸி ஆறு உள்ளிட்ட 14 ஆறுகளில் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி உயர்ந்துள்ளது. கனமழை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும்பட்சத்தில் நிலைமை இன்னும் மோசமாகும் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com