"பிரதமர் பதவியைப் பறித்தால் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக்கு பாதிப்பு'

பிரதமர் தெரசா மே பதவியைப் பறித்தால் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்று பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினரை மூத்த அமைச்சர் டேவிட் டேவிஸ் எச்சரித்துள்ளார்.
"பிரதமர் பதவியைப் பறித்தால் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக்கு பாதிப்பு'

பிரதமர் தெரசா மே பதவியைப் பறித்தால் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தை பாதிக்கப்படும் என்று பிரிட்டனை ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினரை மூத்த அமைச்சர் டேவிட் டேவிஸ் எச்சரித்துள்ளார்.

பிரிட்டனில் இடைக்காலத் தேர்தலை அவசரப்பட்டு அறிவித்து ஏற்கெனவே இருந்த தனிப் பெரும்பான்மையை இழந்தது மட்டுமல்லாமல், கட்சியின் தொடர் வீழ்ச்சிக்கும் தெரசா மே வழி வகுத்துவிட்டார் என்று கன்சர்வேடிவ் கட்சியில் ஒரு பிரிவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அவரைக் கட்சித் தலைமையிலிருந்தும் பிரதமர் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். ஆனால் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் எவரும் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அவர்கள் தொடர்ந்து தெரசா மேயை ஆதரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐரோப்பிய யூனியன் அமைப்பிலிருந்து பிரிட்டன் வெளியேறும் பிரெக்ஸிட் நடவடிக்கைக்கான பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது. பிரெக்ஸிட் விவகார அமைச்சராக டேவிட் டேவிஸ் உள்ளார். ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் சில வட்டாரங்களில் பிரதமருக்கு எதிராக இருந்து வரும் முணுமுணுப்பு குறித்து டேவிட் டேவிஸ் தெரிவித்திருப்பதாவது:
ஐரோப்பிய யூனியனைவிட்டு பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடங்கவிருக்கும் நிலையில், பிரதமர் மீது கடுமையான நெருக்கடியை கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து அளித்து வருகின்றனர். இது பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளைக் கடுமையாக பாதிக்கும். தெரசா மே துணிச்சலானவர். அவர் ஆலோசித்து எடுக்கும் முடிவை நிறைவேற்றுவதில் உறுதியானவர். பிரெக்ஸிட் விவகாரத்தில் சாதகமான நிலைப்பாடுகளை வெல்லும் வகையில் பேச்சுவார்த்தைகளை அவர் நடத்திச் செல்வார். அவரைப் பதவியிலிருந்து மாற்றத் தேவையில்லை, தற்போதைய நிலையில் அவர்தான் பிரதமராகத் தொடர வேண்டும் என்று அனைத்து மூத்த அமைச்சர்களும் ஏற்கெனவே தெரிவித்துவிட்டனர். எதிர்க்கட்சியினரின் பிரசாரத்தை மனதில் வைத்துக் கொண்டு ஆளும் கட்சியைச் சேர்ந்த சிலரே பிரதமருக்கு நெருக்கடி அளித்தால், பேச்சுவார்த்தை பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், பிரிட்டனின் நலனுக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் கடுமையான நிலைப்பாடுகளையும் முன்வைக்கக் கூடும். எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சி, பிரெக்ஸிட்டுக்கு விரோதமான கொள்கை உடையது. அந்தக் கட்சியால் நாட்டுக்கு சாதகமான சிறந்த உடன்படிக்கையை ஏற்படுத்த முடியாது.
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் முழுமையாக வெளியேறப் போதுமான கால அவகாசம் தேவைப்படும். ஐரோப்பிய நாடுகளுடன் தொழில், வர்த்தகம் போன்ற விவகாரங்களில் புதிய உடன்பாடுகளை செயல்படுத்த இரண்டு ஆண்டுகள் அவகாசம் கோருவேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com