ரூ.6,500 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் அழிப்பு: மியான்மர்-தாய்லாந்து அதிரடி

சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் ரூ.6,500 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் திங்கள்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன.

சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மியான்மர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் ரூ.6,500 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் திங்கள்கிழமை தீயிட்டு அழிக்கப்பட்டன.

போதைப் பொருள்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் மியான்மர் தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதன் எல்லைப் பகுதிகளில் அதிக அளவில் போதை மருந்து கடத்தல் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதனை முறியடிக்க பாதுகாப்பு படை பெரும் முயற்சிகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் ஆயுதம் தாங்கிய கும்பல், ஓபியம், ஹெராயின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு கடத்தி விற்பனை செய்யும் நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தைக் குறிக்கும் வகையில், மியான்மரில் கடத்தல்காரர்களிடமிருந்து பிடிபட்ட ரூ.2,500 கோடி மதிப்பிலான ஓபியம், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது.
இதேபோன்று, தாய்லாந்தில் கடத்தல்காரர்களிடமிருந்து பிடிபட்ட 7,800 கிலோ யாபா போதை மாத்திரைகள் உள்ளிட்ட ரூ.4,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள்களை அதிகாரிகள் தீயிட்டுக் கொளுத்தி அழித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com