உலக புத்தகத் தலைநகர் ஷார்ஜா: யுனெஸ்கோ அறிவிப்பு

2019-ஆம் ஆண்டுக்கான உலகப் புத்தகத் தலைநகராக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரை ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.
உலக புத்தகத் தலைநகர் ஷார்ஜா: யுனெஸ்கோ அறிவிப்பு

2019-ஆம் ஆண்டுக்கான உலகப் புத்தகத் தலைநகராக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷார்ஜா நகரை ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது.

மக்களிடையே புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், உலகின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு நிகழ்வுகளை யுனெஸ்கோ ஏற்பாடு செய்து வருகிறது.
புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் நகரங்களைத் தேர்ந்தெடுத்து, அங்கு இந்த திட்டங்களை யுனெஸ்கோ அறிமுகப்படுத்தி வருகிறது.
அந்த நகரங்களுக்கு புத்தகத் தலைநகர் என்ற சிறப்பு அந்தஸ்தையும் யுனெஸ்கோ வழங்குகிறது.
அந்த வகையில், வரும் 2019-ஆம் ஆண்டுக்கான உலக புத்தகத் தலைநகராக ஷார்ஜா நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து "நீங்கள் இருப்பது ஷார்ஜா, எனவே படியுங்கள்' என்ற கோஷத்துடன், சிறப்பு பதிப்பக மண்டலங்களை உருவாக்குவது, பல்வேறு மாநாடுகளை நடத்துவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஆறு மாதங்களுக்கு நடத்தப்படும் என்று யுனெஸ்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019-ஆம் ஆண்டில் உலக புத்தகம் மற்றும் காப்புரிமை தினமான ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி இந்த நிகழ்ச்சிகள் தொடங்கும் என யுனெஸ்கோ தெரிவித்துள்ளது.
கடந்த 2003-ஆம் ஆண்டின் உலக புத்தகத் தலைநகராக தில்லி தேர்ந்தெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com