ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியாவுக்கு டிரம்ப் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம் பெறும் இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம்: இந்தியாவுக்கு டிரம்ப் ஆதரவு

ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் நிரந்தர இடம் பெறும் இந்தியாவின் முயற்சிக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பை திங்கள்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக இடம் பெறுவதற்கு அமெரிக்கா அளித்துள்ள ஆதரவை, அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் உறுதி செய்தார்.
இதுமட்டுமன்றி, அணு ஆயுதப் பரவலுக்கு எதிரான கூட்டாளி என்ற முறையில், அணுசக்தி விநியோக நாடுகளின் கூட்டமைப்பு (என்எஸ்ஜி), பாரம்பரிய ஆயுதத் தளவாட ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்தும் வாùஸனார் ஏற்பாட்டமைப்பு, ரசாயன மற்றும் உயிரியல் ஆயுத ஏற்றுமதியைக் கண்காணிக்கும் ஆஸ்திரேலியா குழு ஆகிய அமைப்புகளிலும் இந்தியா உறுப்பிராக இணைய வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது என்று அந்தக் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: சர்வதேச அமைப்புகளில் இந்தியா இணைவதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்காவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த ஆதரவு இரு நாடுகளின் நலன்களுக்கும் உகந்தது என்பதால், அமெரிக்காவின் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது என்றார் அவர்.
இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற நேசப் படைகளின் அங்கமான அமெரிக்கா, ரஷியா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளான உள்ளன.
பாதுகாப்புக் கவுன்சில் எடுக்கும் முடிவுகளை ரத்து செய்யும் 'வீட்டோ' அதிகாரம் கொண்ட அந்த இடத்தைப் பெற, இந்தியா முயற்சி செய்து வருகிறது.
48 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட, அணுசக்தி தொடர்பான பொருள்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் என்எஸ்ஜி அமைப்பில் உறுப்பினராகச் சேரவும் இந்தியா முயன்று வருகிறது.
எனினும், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு அளிக்கப்படும் சலுகை, அதே போன்ற பிற நாடுகளிடம் பாரபட்சம் காட்டுவதாக இருக்கக் கூடாது என்று கூறி, சீனா அந்த முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com