சட்டத்தில் இருந்து தப்பியோடுபவர்களின் புகலிடம் பிரிட்டன்: இந்தியத் தூதர்

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியோடுபவர்களின் புகலிடமாக பிரிட்டன் இருப்பதாக அந்த நாட்டுக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா கூறியுள்ளார்.

சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியோடுபவர்களின் புகலிடமாக பிரிட்டன் இருப்பதாக அந்த நாட்டுக்கான இந்தியத் தூதர் ஒய்.கே.சின்ஹா கூறியுள்ளார்.

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடிஅளவுக்கு கடன் பெற்றுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா, பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ளதை அவர் மறைமுகமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.
லண்டனில் இந்திய-பிரிட்டன் நல்லுறவு தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஒய்.கே.சின்ஹா பேசியதாவது:
சட்டத்தின்பிடியில் இருந்து தப்பியோடுபவர்களின் புகலிடமாக பிரிட்டன் விளங்குகிறது என்றே நாங்கள் கருதுகிறோம். இதன் மூலம் இந்திய விரோத செயல்கள்பிரிட்டன் மண்ணில் நிகழ அனுமதிக்கப்படுகிறது. இதனால் இந்திய மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்தியா ஒரு சிறந்த ஜனநாயக நாடு. இருந்தபோதிலும் நட்பு நாடுகளை பாதிக்கும் விஷயங்களை வெளிப்படையாக விவாதிக்க முடியாத சூழ்நிலைதான் உள்ளது என்றார்அவர்.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு, அதனைத் திருப்பிச் செலுத்தாமல் பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக இந்தியா ஏற்கெனவே அறிவித்துள்ளது.
அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்க வேண்டுமென்று பிரிட்டீஷ் அரசுக்கு மத்திய அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜரான அவர் ஜாமீன் பெற்றார். பிட்டனில் சுதந்திரமாக சுற்றி வரும் அவர், சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகளையும் பார்த்து ரசித்தார். இந்தியாவில் தேடப்படும் பொருளாதாரக் குற்றவாளியான அவர், பிரிட்டனில் சுக வாழ்க்கையில் இருப்பது இந்திய மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com