வெனிசூலா உச்ச நீதிமன்றத்தின் மீது ஹெலிகாப்டர் மூலம் குண்டு வீச்சு

வெனீசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மடுரோவின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாக, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மீது ஹெலிகாப்டர் மூலம் கையெறி குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.
வெனிசூலா உச்ச நீதிமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம்  கையெறி குண்டு வீசப்பட்டபோது தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட விடியோ காட்சி.
வெனிசூலா உச்ச நீதிமன்றத்தில் ஹெலிகாப்டர் மூலம் கையெறி குண்டு வீசப்பட்டபோது தொலைவிலிருந்து எடுக்கப்பட்ட விடியோ காட்சி.

வெனீசுலாவில் அதிபர் நிக்கோலஸ் மடுரோவின் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாக, அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தின் மீது ஹெலிகாப்டர் மூலம் கையெறி குண்டுத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நிக்கோலஸ் மடுரோ தனது அதிபர் மாளிகையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:
அரசுக்கு எதிரான சதிச் செயலின் ஒரு பகுதியாக, உச்ச நீதிமன்றத்தின் மீது "பயங்கரவாதத்' தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
அந்த வளாகத்தின்மீது ஹெலிகாப்டர் மூலம் இரண்டு கையெறி குண்டுகள் வீசப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அந்த ஹெலிகாப்டர் நீதித் துறை அமைச்சகம், உள்துறை அமைச்சகம் ஆகியவற்றையும் வட்டமிட்டது.
அந்த "பயங்கரவாதத்' தாக்குதலைத் தொடர்ந்து, நாட்டின் அமைதியைப் பாதுகாப்பதற்காக முப்படைகளையும் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டுள்ளேன்.
உச்ச நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நிகழ்த்தப் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டரை விரைவில் கைப்பற்றி, தாக்குதல் நிகழ்த்தயவரையும் போலீஸார் கைது செய்வர்.
தற்போது அரசுக்கு எதிராகத் திரும்பியுள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் மிகுவேல் ரோட்ரிகூஸ் டாரஸின் ஹெலிகாப்டரில் விமானியாகப் பணியாற்றிய நபரே இந்தத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
டாரஸ் தூண்டுதலின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது என்று மடுரோ தெரிவித்தார்.
எனினும், உச்ச நீதிமன்றத்தின் மீது எப்போது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது என்பதை அவர் தெரிவிக்கவில்லை.
ஏற்கெனவே, தனது ஆட்சியைக் கவிழ்க்க வெனிசூலா தேசியவாதிகள் சதித் திட்டம் தீட்டி வருவதாகவும், அதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருவதாகவும் அதிபர் மடுரோ குற்றம் சாட்டி வருகிறார்.
முன்னதாக, வெனிசூலாவுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டால் எதிர்த்துப் போரிடுவோம் என்று அவர் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அண்மையில் அவர் தனது ஆதரவாளர்களிடையே கூறியதாவது:
வெனிசூலாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா ராணுவரீதியில் தலையிட்டால், இந்த நாட்டில் வன்முறை தலைவிரித்தாடும்.
நாட்டில் சீர்திருத்தங்களைக் கொண்டு வரும் எனது முயற்சிகளுக்கு ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் முடிவு கட்ட யாரும் நினைத்தால், அந்த சவாலை ஆயுதங்கள் மூலம் எதிர்கொள்வோம்.
வெனிசூலாவில் அமெரிக்கா ராணுவம் நுழைந்தால், அது மத்தியக் கிழக்கு நாடுகளில் கிடைக்கும் அனுபவத்தைவிட மிக மோசமான அனுபவத்தை அமெரிக்காவுக்கு அளிக்கும் என்று கூறினார்.
எண்ணெய் வளம் மிக்க வெனிசூலாவில் அரசியல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அமெரிக்கா குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக மடுரோ தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
எனினும், அவரது நிர்வாகத் திறமையின்மையே வெனிசூலாவின் பொருளாதரப் பின்னடைவுக்குக் காரணம் என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
அவரது அரசுக்கு முடிவு கட்டும் வகையில் உடனடியாக அதிபர் தேர்தலை நடத்த வலியுறுத்தி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை 76 பேர் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com