அதிநவீன போர்க் கப்பலை அறிமுகப்படுத்தியது சீனக் கடற்படை

சீனக் கடற்படை, 10 ஆயிரம் டன்கள் எடையைத் தாங்கும் வகையிலான அதிநவீன போர்க்கப்பலை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஜியாங்னன் கப்பல் கட்டுமானத் தளத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட அதிநவீன போர்க்கப்பல்.
சீனாவின் ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஜியாங்னன் கப்பல் கட்டுமானத் தளத்தில் புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்ட அதிநவீன போர்க்கப்பல்.

சீனக் கடற்படை, 10 ஆயிரம் டன்கள் எடையைத் தாங்கும் வகையிலான அதிநவீன போர்க்கப்பலை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.

இந்தப் போர்க்கப்பல், இந்தியா மற்றும் அமெரிக்கக் கடற்படைக்கு கடும் சவாலாக விளங்கும் என்று கருதப்படுகிறது.
இதுதொடர்பாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: ஷாங்காய் நகரில் அமைந்துள்ள ஜியாங்னன் கப்பல் கட்டுமானத் தளத்தில் "055 டிஸ்ட்ராயர்' வகை போர்க்கப்பலை சீனக் கடற்படை புதன்கிழமை அறிமுகப்படுத்தியது.
இந்தக் கப்பல் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது ஆகும். டிஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்களில் இது அடுத்த தலைமுறைக் கப்பலாகும். இந்தப் போர்க்கப்பலில் நவீன ரக ஏவுகணைகளும், எதிரிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஆயுதங்களும் இருக்கும்.
மொத்தம் 10ஆயிரம் டன்கள் எடையைத் தாங்கும் வகையில் இந்தப் போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 போர் விமானங்களையும் இந்தக் கப்பலில் நிறுத்த முடியும். இந்தக் கப்பலை உருவாக்கியுள்ளதன் மூலம் சீனக் கடற்படை மற்றொரு மைல்கல்லை எட்டியுள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலை பல்வேறு சோதனைகளுக்கு உள்படுத்த சீனக் கடற்படைத் திட்டமிட்டுள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி செய்து வருவதால், அதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தனது கடற்படையை சீனா மேலும் வலிமையாக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com