சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் கிடையாது: சீனா

சிக்கிம் எல்லைப் பகுதியான டோங்லாங்கில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று சீனா தெரிவித்துள்ளது.
சிக்கிம் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் கிடையாது: சீனா

சிக்கிம் எல்லைப் பகுதியான டோங்லாங்கில் இந்தியாவுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று சீனா தெரிவித்துள்ளது.

மேலும், டோங்லாங் பகுதியில் சீனா மேற்கொண்டு வரும் சாலை அமைக்கும் பணியையும் அந்நாடு நியாயப்படுத்தியுள்ளது.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைகள் ஒன்று சேரும் இடத்தில் டோங்லாங் பகுதி அமைந்துள்ளது. இந்த டோங்லாங் பகுதியின் பெருமளவு இந்தியாவின் கட்டுப்பாட்டிலும், சிறிய அளவிலான பகுதி மட்டும் பூடானின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது.
இந்நிலையில், டோங்லாங் பகுதிக்குள் கடந்த சில நாள்களுக்கு முன்பு நுழைந்த சீன ராணுவத்தினர், அங்கிருந்த இந்திய ராணுவ நிலைகளை சேதப்படுத்தினர். மேலும், அந்தப் பகுதியில் சாலை அமைக்கும் பணியையும் சீனா மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றான சூழல் நிலவுவதை அடுத்து, அங்கு ஏராளமான இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சீன ராணுவ வீரர்களை மேலும் முன்னேற விடாமல் தடுத்து வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவிலிருந்து மானசரோவர் யாத்திரைக்கு செல்லும் பக்தர்களை
நாதுலா நுழைவாயிலில் சீன அதிகாரிகள் தடுத்தனர்.
மேலும், இந்த நாதுலா நுழைவாயிலை நிரந்தரமாக முடுவது குறித்து சீன அரசு ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, டோங்லாங் எல்லைப் பிரச்னை மற்றும் மானசரோவார் யாத்திரை ஆகிய விவகாரங்கள் தொடர்பாக சீன அதிகாரிகளுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லூ காங், பெய்ஜிங்கில் செய்தியாளர்ளை புதன்கிழமை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
டோங்லாங் முழுக்க முழுக்க சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும். இது, 1890-ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட சீன - பிரிட்டன் ஒப்பந்தத்திலேயே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
எனவே, எங்கள் நாட்டு எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நாங்கள் (சீனா) சாலை அமைப்பதில் என்ன தவறு இருக்கிறது? இந்த விவகாரத்தில் தலையிட இந்தியா உள்ளிட்ட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை.
எனவே, சீனாவின் பகுதியான டோங்லாங்கிலிருந்து இந்திய ராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும். இல்லையெனில், எங்கள் இறையாண்மையைப் பாதுகாக்க எந்த விலையையும் கொடுக்க சீனா தயங்காது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com