விரைவில் வரப்போகுது ஆப்பிளின் ஐபோன் எக்ஸ்! 

உலகப்புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தற்போது மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஐபோன் எக்ஸ் என்னும் பெயருடன் ‘ஐபோன் 8’ - ஐ அறிமுகப்படுத்த உள்ளது. 
விரைவில் வரப்போகுது ஆப்பிளின் ஐபோன் எக்ஸ்! 

நியூயார்க்: உலகப்புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனம் தற்போது மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் ஐபோன் எக்ஸ் என்னும் பெயருடன் ‘ஐபோன் 8’ - ஐ அறிமுகப்படுத்த உள்ளது. 

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் உலக அளவில் பலராலும் அதிகம் விரும்பப்படும் ஒரு வகை போனாக உள்ளது.அதிலும் அவ்வப்போது மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் அடுத்த பிரிவு போன்கள் ஆப்பிளில் இருந்து அறிமுகப்படுத்தப்படும். அந்த வரிசையில் தற்போது ஐபோன் 8 வகை போன் அறிமுகப்படுத்தபட உள்ளது.  

தற்போது ஐபோன் 7 வகை போன்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் புதிதாக அறிமுகமாக உள்ள ஐபோன் 8 வகை போன்களின் சிறப்பம்சங்கள் குறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் 'நிக்கி' என்னும் செய்தித்தாளில் வெளிவந்துள்ள விபரங்களாவன.

ஐபோன் 8 வகை போன்கள் 5.8 இன்ச் அளவு திரையுடன் ஓ.எல்.ஈ.டி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாக உள்ளன. இவற்றுடன் மேலும் மேம்படுத்தப்பட்ட இரண்டு வகைகளும் அறிமுகபடுத்தப்பட உள்ளன  அவை முறையே ஐபோன்  7 மற்றும் ஐபோன்  7S என பெயரிடப்பட உள்ளன.  ஐபோன் 8 - ன் தலை மற்றும் கால் பகுதிகளை சிறிதளவு குறைப்பதன் மூலம், இது ஐபோன் 7S -ஐ விட சிறியதாக இருக்குமாறு வடிவமைக்கப்படுகிறது.                 

5.8 இன்ச் திரை அளவில் 5.15 இன்ச் மற்றும் திரையாக இருக்கும், மீதமுள்ள பகுதிகள் போன் செயல்பாட்டிற்கென ஒதுக்கப்பட உள்ளது. இந்த போனிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இருக்கும்.  இத்துடன் ஐபோன் மற்றும் ஐபாட் சாதனங்களை கணினியுடன் இணைத்து செயல்பட 'அல்ட்ரா அக்சஸரீ கனெக்டர்' என்னும் புதிய கருவியும் வழங்கப்பட உள்ளது.

தற்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.67000 இருக்குமென்று எதிர்பார்க்கப்படும் இந்த ஐபோன் 8 வகை போன்தான் ஆப்பிளின் வரலாற்றிலேயே அதிக பட்ச விலை கொண்டதாக இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com