மோதலுக்குத் தூண்டுதல்: ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

சர்வதேச கடல் பகுதியில் ஈரான் மோதல் சூழலைத் தூண்டிவிடுகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

சர்வதேச கடல் பகுதியில் ஈரான் மோதல் சூழலைத் தூண்டிவிடுகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ஈரானையொட்டிய ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் அமெரிக்க கடற்படையின் கப்பல்கள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், அந்தக் கப்பல்களுக்கு வெகு அருகில் ஈரானைச் சேர்ந்த ஒரு கப்பல் வந்ததாக கூறப்படுகிறது. இது மோதல் சூழலை ஏற்படுத்தும் செயல் என்று அமெரிக்க பாதுகாப்புப் படை தலைமையகமான பென்டகன் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சம்பவத்தின்போது, ஈரானிய கப்பலுக்கும் அமெரிக்க போர்க் கப்பலுக்கும் இடையே வெறும் 150 மட்டுமே இடைவெளி இருந்தது. ஈரானிய கப்பலின் செயல் ஆபத்தானது என்றும் கண்ணியமான நடைமுறைகளை மீறும் செயல் என்றும் பென்டகன் தெரிவித்தது.
இதனிடையே, வெள்ளை மாளிகை புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: ஹோர்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க போர்க் கப்பலுக்கு வெகு அருகில் ஈரானிய கப்பல் வந்தது மோதலைத் தூண்டிவிடும் செயலாகும். இது போன்ற ஆட்சேபகரமான நடவடிக்கைகளில் ஈரான் இதற்கு முன்னரும் ஈடுபட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க போர்க் கப்பல்கள் ரோந்து வரும் கடல் பகுதிகளில் வேண்டுமென்றே மிக நெருக்கமாக ஈரானின் சிறப்பு ராணுவப் பிரிவினரான புரட்சி பாதுகாப்புப் படை கடந்த மாதம் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது என்று அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
சர்வதேச எண்ணெய் கப்பல்களில் மூன்றில் ஒரு பங்கு ஹோர்முஸ் ஜலசந்திப் பகுதி வழியாகக் கடந்து செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com