அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களிடையே கடும் சண்டை: சிரியாவில் ஒரே நாளில் 47 பேர் பலி!

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸில் அரசுப் படைகள் மற்றும் போராளிக் குழுக்களிடையே  நடைபெறும் சண்டையில் இன்று ஒரே நாளில் 47 பேர் பலியாகினர்.
அரசு படைகள் மற்றும் போராளி குழுக்களிடையே கடும் சண்டை: சிரியாவில் ஒரே நாளில் 47 பேர் பலி!

டமாஸ்கஸ்: சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ்ஸில் அரசுப் படைகள் மற்றும் போராளிக் குழுக்களிடையே  நடைபெறும் சண்டையில் இன்று ஒரே நாளில் 47 பேர் பலியாகினர்.

சிரியாவில் அரசுப்படைகளுக்கும், அரசுக்கு எதிராக போராடிவரும் ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ள  பல்வேறு போராளிக்கு குழுக்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

அந்த கவகையிகள் சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அதற்கு வடகிழக்கே அமைந்துள்ள ஜுபைர்  ஆகிய இரு இடங்களிலும் கடும் சண்டை நடந்தது.இதில் ஜுபைர்   னபாரத்தில் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களும் நடைபெற்றன.

இந்த  இரு தாக்குதல்களிலும் சேர்த்து இன்று ஒரே நாளில் மட்டும் 47 பேர் மரணமடைந்தனர்.

இந்த தகவல்களை சிரியன் ஆபிஸர்வேட்டரி பார் ஹியூமன் ரைட்ஸ் எனும் போர் கண்காணிப்பு அமைப்பு  வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com