இனி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வந்தாச்சு 'பேஸ்புக் லைவ்'!

அலைபேசி வழியாக மட்டுமின்றி இனி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்களும் 'பேஸ்புக் லைவ்' வசதியை பயன்படுத்தமுடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இனி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களிலும் வந்தாச்சு 'பேஸ்புக் லைவ்'!

நியூயார்க்:அலைபேசி வழியாக மட்டுமின்றி இனி டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை பயன்படுத்துபவர்களும் 'பேஸ்புக் லைவ்' வசதியை பயன்படுத்தமுடியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் தனது பயனாளர்களுக்காக 'பேஸ்புக் லைவ்' என்ற வசதியை அறிமுகப்படுத்தியிருந்தது.இதன்மூலம் அவர்கள் தங்கள் அலைபேசி வழியாக பதிவு செய்யும் வீடீயோக்களை நேரடியாக ஒளிபரப்பும் வசதி இருந்தது. அலைபேசி மூலம் செயல்பட்டு வந்த இதனை  டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்  வழியாக அணுகும் வசதியானது, முதலில் தனியான பயனாளர்களுக்கு இல்லாமல், முகநூல் பக்கங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு  வந்தது.

தற்போது இந்த வசதியை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வழி முகநூல் பயனாளர்களு ம் மேற்கொள்ள இயலும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலானது நேற்று பேஸ்புக் நிறுவன வலைப்பூ பதிவொன்றின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது மேம்படுத்தப்பட்ட வசதிகள் இதில் அறிமுகம் செய்ப்பட்டிருப்பதாகவும் அந்த பதிவு தெரிவிக்கிறது.

இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள தொழில்நுட்ப இணையதளமான 'டெக் கிரஞ்ச்' இந்த வசதியை அறிமுகம் செய்ததன் மூலம் முகநூலானது டிவிட்டர் மற்றும் பெரிஸ்கோப் ஆகிய தளங்களை பின்னுக்கு தள்ளி யூ டியூப் தளத்துடன் நேரடியாக போட்டிக்கு நிற்கிறது' என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த வசதியானது ‘வீளாக்கிங்’ என்று அழைக்கப்படும் வீடியோ ப்ளாக்கிங் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்குமென்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com