ஜோர்டான் - சவூதி அரேபியா: பொருளாதார ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியா நாடுகளுக்கிடையில் 15 பொருளாதார ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின. சவூதி மன்னர் சல்மான் மற்றம் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில்

ஜோர்டான் மற்றும் சவூதி அரேபியா நாடுகளுக்கிடையில் 15 பொருளாதார ஒப்பந்தங்கள் திங்கள்கிழமை கையெழுத்தாகின. சவூதி மன்னர் சல்மான் மற்றம் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதுகுறித்து ஜோர்டான் அரசின் செய்தி நிறுவனமான பெட்ரா தெரிவித்துள்ளதாவது:
சவூதி அரேபியாவின் அரசு மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த அதிகாரிகள், ஜோர்டான் அரசுடன் இணைந்து 15 பொருளாதார ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளனர். அதில், இருநாடுகளும் இணைந்து ஜோர்டானில் ரூ.20,000 கோடி மதிப்பிலான முதலீட்டை மேற்கொள்ளும் திட்டங்களும் அடங்கும்.
ஜோர்டானின் கிழக்கு எல்லைப் பகுதியில் மின் உற்பத்தி நிலையங்களை அமைத்தல், வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை மறுசீரமைத்தல் உள்ளிட்ட திட்டங்களும் அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன என்று அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோர்டானின் மிக நெருங்கிய பொருளாதார நட்பு நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது.
வேலையின்மை மற்றும் பொதுக் கடன் அதிகரிப்பு பிரச்னைகளால் ஜோர்டானின் பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com