தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன்

தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் மூன் ஜே-இன் (64) பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
தென் கொரியாவின் புதிய அதிபராகிறார் மூன் ஜே-இன்

தென் கொரியாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் மூன் ஜே-இன் (64) பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அதிபர் தேர்தலில் 13 பேர் போட்டியிட்டனர். தென் கொரிய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட மூன் ஜே-இன், 41 சதவீதம் முதல் 42 சதவீத வாக்குகள் வரை பெற்று அதிபராவார் என்று வாக்குக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 12 வேட்பாளர்களில், ஹோங் ஜூன்-பியோ, ஆன் சியோல்-சூ ஆகிய இருவரும் முறையே சுமார் 23, 21 சதவீத வாக்குகளைப் பெறுவர் என்று தெரிகிறது.
வட கொரியாவுடன் நட்புறவு கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவர் மூன் ஜே-இன். அவரது மகத்தான வெற்றி அந்த இரு நாடுகளிடையேயான உறவுகளில் பெருத்த மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது.
தென் கொரிய அதிபராகப் பதவி வகித்த பார்க் கியூன்-ஹை ஊழல் வழக்கில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது பதவி நீக்கத்தைத் தொடர்ந்து புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முழு வாக்கு எண்ணிக்கை விவரங்கள் புதன்கிழமை வெளியாகும். முடிவுகள் அதிகாரபூர்வாக அறிவிக்கப்பட்டவுடன் புதிய அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com