சாலை விபத்துகளில் தினமும் பலியாகும் இளம்வயதினர் எவ்வளவு பேர் தெரியுமா?

உலகம் முழுவதும் 10 முதல் 19 வயதுடைய இளம் வயதினரின் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது சாலை விபத்துகளே என்று உலக
சாலை விபத்துகளில் தினமும் பலியாகும் இளம்வயதினர் எவ்வளவு பேர் தெரியுமா?

ஜெனீவா: உலகம் முழுவதும் 10 முதல் 19 வயதுடைய இளம் வயதினரின் உயிரிழப்புக்கு முக்கியக் காரணமாக இருப்பது சாலை விபத்துகளே என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
சாலை விபத்துகளில் சிக்கி அதிகம் உயிரிழப்பது இளம்வயதினரே. உலக அளவில் ஒவ்வொரு நாளும் 3 ஆயிரம் பேர் என்ற வகையில் ஆண்டுக்கு 12 லட்சம் பேர் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

கடந்த 2015-இல் ஏற்பட்ட சாலை விபத்து இறப்புகளில் சாலை விபத்துகள், சுவாச நோய்த் தொற்றுகள், தற்கொலை ஆகியவை முக்கிய காரணங்களாக உள்ளன.  

கடந்த 2015-இல் 10-19 வயதினர் பிரிவில் சாலை விபத்தால் ஏற்பட்ட காயங்கள் மூலம் 1,15,302 பேர் உயிரிழந்துள்ளனர். சுவாசத் தொற்றுப் பிரச்னையால் 72,655 பேரும், தற்கொலையால் 67,149 பேரும், வயிறு சம்மந்தமான பிரச்னையால் 63,575 பேரும், தண்ணீரில் மூழ்கி 57,125 பேரும் உயிரிழந்துள்ளனர்.
 
சாலை விபத்துகளில் பாதசாரிகள், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்களே அதிகம் பேர் உயிரிழந்தனர்.

மேலும், மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளான ஆப்பிரிக்கா மற்றும் தென்-கிழக்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ளன.

எச்.ஐ.வி, எய்ட்ஸ், மூளைக் காய்ச்சல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட நோய்த் தொற்று காரணமாகவே பெரும்பாலான இளம்வயதினர் ஆப்பிரிக்க நாடுகளில் உயிரிழந்துள்னர்.

15 முதல் 19 வயதுடைய பெண்கள் அதிகம் பேர் மகப்பேறு சிக்கல்களால் தங்கள் உயிரை இழந்துள்ளனர்.  

தற்கொலை சம்பவங்களே இளம்வயதினர் உயிரிழக்க முக்கிய காரணமாக உள்ளது என உலக சுகாதார மையம் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com