சீனாவில் விஷவாயு கசிவு: 8 பேர் பலி
By DIN | Published on : 20th May 2017 12:38 AM | அ+அ அ- |
சீனாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அந்த நாட்டின் செய்தி நிறுவனமான ஜின்ஹுவா தெரிவித்துள்ளதாவது:
லியோனிங் மாகாணம் லஸ்ஹன்கு மாவட்டத்தில் உள்ள டாலியன் துறைமுக நகரில் கடல்பாசிகளைப் பதனிடும் தொழிற்சாலை உள்ளது. இங்குள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராமல் ஏற்பட்ட விஷவாயு கசிவால் அவர்கள் மயங்கி விழுந்தனர். இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் சிலர் தொழிலாளர்களைக் காப்பற்ற முயன்றபோது அவர்களையும் விஷவாயு தாக்கியது. இதில் எட்டு பேர் உயிரிழந்தனர். மேலும், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.