"அமெரிக்க நாடாளுமன்றக் குழுவில் முன்னாள் எஃப்.பி.ஐ. தலைவர் வாக்குமூலம்'

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு இருந்ததா என்பது குறித்து புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமி
"அமெரிக்க நாடாளுமன்றக் குழுவில் முன்னாள் எஃப்.பி.ஐ. தலைவர் வாக்குமூலம்'

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷிய தலையீடு இருந்ததா என்பது குறித்து புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ.யின் முன்னாள் தலைவர் ஜேம்ஸ் கோமி நாடாளுமன்றக் குழு முன்பாக ஆஜராகி வாக்குமூலம் அளிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
எஃப்.பி.ஐ. தலைமைப் பொறுப்பிலிருந்து ஜேம்ஸ் கோமியை அதிபர் டிரம்ப் திடீரென நீக்கினார். அதிபர் தேர்தலின்போது டிரம்ப்புக்கு சாதகமான வகையில் ரஷியா தலையிட்டது, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஃபிளின் ரஷிய தொடர்பு குறித்து ஜேம்ஸ் கோமி விசாரணை மேற்கொண்டது உள்ளிட்ட காரணங்களால்தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்று எதிர்க்கட்சியினரும் ஊடகங்களும் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், அதிபர் தேர்தலில் ரஷியத் தலையீடு குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் அமெரிக்க நாடாளுமன்றக் குழுவின் முன் ஜேம்ஸ் கோமி வாக்குமூலம் அளிப்பார் என்று தகவல் வெளியாகியது. அந்த விவகாரத்தில் அவரது பதவி நீக்கம் வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவிப்பார் என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com