புதிய நுண்ணுயிரிக்கு அப்துல் கலாம் பெயரை சூட்டி கெளரவித்தது நாசா

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தனது அமைப்பு கண்டுபிடித்துள்ள புதிய நுண்ணுயிரிக்கு இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரைச் சூட்டி கெளரவித்துள்ளது.
புதிய நுண்ணுயிரிக்கு அப்துல் கலாம் பெயரை சூட்டி கெளரவித்தது நாசா

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) தனது அமைப்பு கண்டுபிடித்துள்ள புதிய நுண்ணுயிரிக்கு இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பெயரைச் சூட்டி கெளரவித்துள்ளது.
பாக்டீரியா வகையைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புவியில் இதுவரை அந்த நுண்ணுயிரி கண்டறியப்படவில்லை.
நாசாவின் ஜெட் புரோபல்சன் ஆய்வகத்தைச் (ஜேபிஎல்) சேர்ந்த விஞ்ஞானிகள், சர்வதேச ஆய்வு மையத்தில் உள்ள "ஃபில்ட்டர்'களை ஆய்வு செய்தபோது இந்த புதியவகை நுண்ணுயிரி கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு "சோலிபேசில்லஸ் கலாமி' என்று பெயரிடப்பட்டுள்ளது.
நாசா ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானியும், தமிழருமான கஸ்தூரி வெங்கடேஷ்வரன் இது குறித்துக் கூறியதாவது:
புதிதாகக் கண்டுபிடிக்கப்படும் நுண்ணுயிரிகளுக்கு விஞ்ஞானிகளின் பெயரைச் சூட்டுவது வழக்கம்.
கலாமின் பெயர் புதிய நுண்ணுயிரிக்குச் சூட்டப்பட்டதில் சக தமிழராக நான் பெருமையடைகிறேன். விஞ்ஞானத்தில் அவரது சிறப்பான பங்களிப்பை நன்கு அறிந்துள்ளேன்.
விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் "ஃபில்ட்டர்'களில் சுமார் 40 மாதங்களாக இந்த நுண்ணுயிரி இருந்து வந்துள்ளது. அதனை ஆய்வு மையத்துக்கு எடுத்து வந்து ஆய்வு செய்தபோது அதில் புதிய நுண்ணுயிரி என்பது கண்டறியப்பட்டது. இந்த நுண்ணுயிரி இப்போது வரை பூமியில் கண்டறியப்படவில்லை.
கலாம் பெயர் சூட்டப்பட்டுள்ள நுண்ணுயிரியை முழுமையாக ஆய்வு செய்யவில்லை. எனினும், கதிர்வீச்சு சேதத்தில் இருந்து பாதுகாக்கும் ரசாயனங்களை தயாரிக்க இந்த நுண்ணுயிரி உதவிகரமாக இருக்கும் என்று முதல்கட்டமாக கண்டறியப்பட்டுள்ளது.
கேடு விளைவிக்கும் கிருமிகள் எதுவும் விண்வெளி ஆய்வு மையத்தை தாக்கிவிடாமல் அதன் சுற்றுச்சூழலை தூய்மையாகப் பாதுகாப்பதுதான் எனது முக்கியப் பணி என்றார் அவர்.
கேரள மாநிலம் தும்பாவில் இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவுதளத்தை அமைப்பதற்கு முன்பு, 1963-ஆம் ஆண்டு நாசாவில் அப்துல் கலாம் பயிற்சி பெற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com