பிரிட்டனில் மீண்டும் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்படலாம்: தெரசா மே எச்சரிக்கை

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இதே போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே எச்சரிக்கை

மான்செஸ்டர்: பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இதே போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் இசை நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கில் திங்கள்கிழமை இரவு பயங்கரவாதி நிகழ்த்திய தற்கொலைத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்தனர். பலியானவர்களில் சிறுவர்களும் அடங்குவர். இந்தத் தாக்குதலில் மேலும் 59 பேர் காயமடைந்தனர். இந்த பயங்கரவாத சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச பயங்கரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது.

அந்த அமைப்பு சமூக வலைதளத்தில் பல்வேறு மொழிகளில் வெளியிட்ட அறிக்கையில், 'மான்செஸ்டர் நகரில் மத துரோகிகள் கூடியிருந்த இடத்தில் கலீஃபாவின் வீரர் ஒருவர் தாக்குதல் நிகழ்த்தினார்' என்று குறிப்பிட்டிருந்தது

இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு நிலை குறித்து நடந்த அவசர ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு, இதே போன்று மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் என பிரிட்டன் பிரதமர் தெரசா மே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நாட்டிற்கு அச்சுறுத்தல் அதிகமாகி இருப்பதால் கவனமாக இருக்கும்படி ராணுவ வீரர்கள், விளையாட்டு போட்டிகள் நடத்துவோர், மற்ற பொது நிகழ்ச்சிகளை நடத்துவோருக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரிட்டன் நகரின் வீதிகள் மற்றும் முக்கிய இடங்களிலும் போலீஸாருக்கு பதிலாக ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் செயல்படும்படி தெரசா மே கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com