பர்தாவுக்குத் தடை: பிரிட்டன் அரசியல் கட்சி தேர்தல் வாக்குறுதி!

சூரிய ஒளியைத் தடுத்து விட்டமின் "டி' குறைபாட்டை ஏற்படுத்துவதால் பர்தாவுக்குத் தடை விதிக்கப்படும் என்று பிரிட்டன் சுதந்திரக் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

சூரிய ஒளியைத் தடுத்து விட்டமின் "டி' குறைபாட்டை ஏற்படுத்துவதால் பர்தாவுக்குத் தடை விதிக்கப்படும் என்று பிரிட்டன் சுதந்திரக் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.
பிரிட்டனில் ஜூன் 8-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி தனது தேர்தல் அறிக்கையை பிரிட்டன் சுதந்திரக் கட்சி வெளியிட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பர்தா மற்றும் முகத்திரை அணிவது போன்ற நடவடிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாக உள்ளது. இதனால், பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு பாதிப்பு மட்டுமின்றி, சூரிய ஒளி உடலில் படுவதை தடுத்து விட்டமின் "டி' குறைபாட்டையும் பர்தா ஏற்படுத்துகிறது.
பாகுபாடு மற்றும் மனிதநேயமற்ற அடக்குமுறை சின்னமாகத் திகழும் இதுபோன்ற நடவடிக்கைகளை ஒருபோதும் ஏற்க முடியாது. அதன் காரணமாகவே, பிரிட்டனில் பர்தா மற்றும் முகத்திரை அணிவதற்கு தடை விதிக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை கட்சி அளித்துள்ளது.
அனைத்துப் பெண்களுக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அப்போதுதான், பொது வாழ்க்கை மற்றும் பணியிடங்களில் அவர்கள் முழுமையான பங்களிப்பை வழங்க முடியும் என்று பிரிட்டன் சுதந்திரக் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com