குல்பூஷன் ஜாதவுக்கு உடனடியாக தூக்கு: பாகிஸ்தான் உச்ச நீதின்றத்தில் மனு! 

பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில்... 
குல்பூஷன் ஜாதவுக்கு உடனடியாக தூக்கு: பாகிஸ்தான் உச்ச நீதின்றத்தில் மனு! 

இஸ்லமபாத்: பாகிஸ்தான் சிறையில் வாடும் இந்தியரான குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் ஜாதவ். இவரை பாகிஸ்தானில் உளவு பார்த்தார் என்று குற்றம் சாட்டி, அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து உள்ளது. அவருக்கு முறையாக கிடைக்கக் கூடிய தூதரக உதவிகளைக் கூட பாகிஸ்தான் மறுத்ததால் இந்தியா சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாடியது.

இந்த விவகாரத்தின் விசாரணையின் பொழுது இருதரப்பு வாதத்தையும் கேட்ட சர்வதேச நீதிமன்றம், குல்பூஷண் ஜாதவுக்கு இந்திய தூதரக அதிகாரிகலின் உதவிகள் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றதுடன்  அடுத்த உத்தரவு வரும் வரையில் மரண தண்டனையை நிறைவேற்ற கூடாது என பாகிஸ்தானுக்கு தடை விதித்து உத்தவிட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் செனட்  தலைமை வழக்கறிஞரான பரூக் நாயக் குல்பூஷன் ஜாதவுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை  உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரி பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் அவர் சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவு பாகிஸ்தானின் உள்நாட்டு சட்டத்தை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்று கூறியுள்ளதாக தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com