நியூயார்க்கில் பாதசாரிகள் மீது காரை விட்டு மோதி பயங்கரவாதி தாக்குதல்: 8 பேர் பலி, 24 பேர் படுகாயம்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் பாதசாரிகள் செல்லும் பாதையில் காரை ஓட்டி வந்து கண்மூடித்தனமாக
நியூயார்க்கில் பாதசாரிகள் மீது காரை விட்டு மோதி பயங்கரவாதி தாக்குதல்: 8 பேர் பலி, 24 பேர் படுகாயம்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டன் பகுதியில் பாதசாரிகள் செல்லும் பாதையில் காரை ஓட்டி வந்து கண்மூடித்தனமாக நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நியூயார்க் உலக வர்த்தக மையம் அருகே உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் பாதசாரிகள் செல்லும் சாலையில் பாய்ந்து வந்த கார் நடந்து சென்றவர்கள் மீது மோதியதுடன் பள்ளி பேருந்து மீதும் பயங்கரமாக மோதியது. இந்த தாக்குதலில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 24க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மன்ஹாட்டன் பகுதியில் குழந்தைகள் ஹாலோவீன் கொண்டாடப்படும் நிலையில், பள்ளிக்கூடம் அருகே 3.05 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

தாக்குதலை ஏற்படுத்தியவர்கள், கையில் வைத்திருந்த 2 போலித் துப்பாக்கியை காட்டி மக்களை மிரட்டிக்கொண்டு வாகனத்தில் இருந்து இறங்கி தப்பிக்க முயற்சித்தனர். அப்போது போலீஸார் அவர்களை துப்பாக்கியால் சுட்டுபிடித்தனர். பிடிபட்டுள்ள நபரின் புகைப்படத்தை வெளியிட காவல்துறையினர் மறுத்து விட்டனர். பிடிபட்டுள்ள நபர் பயங்கரவாதி என்றும் நியூயார்க் நகர காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் ஒரு பயங்கரவாத சம்பவம் என்று கூறியுள்ள நியூயார்க் நகர மேயர், பிடிப்பட்ட இளைஞரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் அவர் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாம் பிராத்தனை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

இந்த கொடூர தாக்குதலில் உயிரிழந்த 8 பேர்களில் 5 பேர் அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பெல்ஜியத்தைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவின் நிதி மற்றும் பொழுதுபோக்கு மூலதனம் மிக்க இந்த நகரத்தில் 8.5 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-இல் அல்-கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பின்னர், உயர் பாதுகாப்புடன் இருந்த நகரம் இருந்து வந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. 

செப்டெம்பர் 2016-இல் செல்சியாவில் நிகழ்ந்த குழாய் குண்டு வெடிப்பில் 31 பேர் காயமடைந்தனர். அதற்கு பின்னர் நடந்த முதல் சம்பவம் இது. அன்றைய சம்பவத்திற்கு ஆப்கான் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு அமெரிக்கர், அஹ்மத் கான் ரஹிமி, இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாதத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டார்.

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். துக்கத்தில் பங்கேற்பதோடு காயமடைந்தோர் விரைவில் நலம்பெற பிரத்தனை செய்வதாக மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com