ஒசாமா பின் லேடன் குறித்த 4,70,000 புதிய கோப்புகளை வெளியிட்டது சி.ஐ.ஏ!

சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இருப்பிடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட எக்கச்சக்கமான தகவல்கள் அடங்கிய 4,70,000 புதிய கோப்புகளை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ வெளியிட்டுள
ஒசாமா பின் லேடன் குறித்த 4,70,000 புதிய கோப்புகளை வெளியிட்டது சி.ஐ.ஏ!

வாஷிங்க்டன்: சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இருப்பிடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட எக்கச்சக்கமான தகவல்கள் அடங்கிய 4,70,000 புதிய கோப்புகளை, அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சி.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின் லேடன், பாகிஸ்தானின் அபோட்டாபாத் என்னும் இடத்தில் பதுங்கியிருந்த பொழுது, 2011-ஆம் ஆண்டு  மே மாதம், அமெரிக்காவின் 'சீல்' படைப்பிரிவு வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான்.       

அப்பொழுது அவன் வீட்டிலிருந்து  முக்கிய ஆவணங்கள் மற்றும் விடியோக்கள் கைப்பற்றப்பட்டன. இத்தனை நாள் சி.ஐ.ஏ வசம் இருந்த இந்த ரகசிய ஆவணங்கள் அனைத்தும் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த தொகுப்பில் ஒசாமா பின் லேடனின் மகனின் திருமண வீடியோ மற்றும் ஒசாமா பின் லேடன் எழுதிய டைரிகள் கிடைத்ததாக, அவற்றை முன்னமே பார்வையிட்ட ஆராய்ச்சியாளர்கள் தாமஸ் மற்றும் பில் ஆகியோர் தெரிவித்தனர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணங்கள் அல் கொய்தா என்னும் தீவிரவாத அமைப்பின்  திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்னும் கூர்மையாக அறிந்து கொள்ள உதவும் என்று  சி.ஐ.ஏ இயக்குனர் மைக் பொம்பே தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com