ஐஎஸ்ஐஎஸ் விரைவில் தக்க விளைவுகளைச் சந்திக்கும்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்கா மீது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு நடத்தும் தாக்குதல்களுக்கு நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் விரைவில் தக்க விளைவுகளைச் சந்திக்கும்: டிரம்ப் ஆவேசம்

அமெரிக்கா மீது நடத்தப்படும் ஒவ்வொரு தாக்குதல் சம்பவங்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நிச்சயம் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆவேசமாகக் கூறியுள்ளார்.

அமெரிக்கா மீது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தும் ஒவ்வொரு தாக்குதலுக்கும் 10 மடங்கு அதன் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். இதுபோன்ற மிருகங்களை வேட்டையாட வேண்டியது அவசியம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய காலங்களில் அமெரிக்கா மீதான பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அவ்வகையில் அக்டோபர் 31-ந் தேதி நடந்த கோரத் தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும், உலகம் முழுவதும் பெரிய அச்சுறுத்தலாக விளங்கும் பயங்கரவாத அமைப்புகளை உடனடியாக அழிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தக்க விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com