சீக்கிய மாணவன் மீதான தாக்குதல்: விளக்கம் கேட்டு 'ட்வீட்' செய்த சுஷ்மா ஸ்வராஜ்

அமெரிக்காவில் சீக்கிய மாணவன் மீதான தாக்குதல் சம்பவத்துக்கு மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விளக்கம் கேட்டுள்ளார்.
சீக்கிய மாணவன் மீதான தாக்குதல்: விளக்கம் கேட்டு 'ட்வீட்' செய்த சுஷ்மா ஸ்வராஜ்

அமெரிக்காவின் வாஷிங்கடன் மாகாணத்தில் செயல்பட்டு வரும் கென்ட்ரிட்ஜ் உயர்நிலைப் பள்ளியின் அருகில் உள்ள நடைபாதையில் சீக்கிய மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்பகுதியில் சென்று கொண்டிருந்த அந்த மாணவன் மீது பின்னால் வந்த மற்றொரு அமெரிக்க மாணவன் அடித்து கீழே தள்ளினான். பின்னர் அந்த சீக்கிய மாணவனை சரமாரியாகத் தாக்கியுள்ளான். 

அந்த சீக்கிய மாணவன் தன்னை தற்காத்துக்கொள்ள முயற்சித்தும் பலனில்லை. இச்சம்பவத்தை தி நியூஸ் ட்ரிப்யூன் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டது. 

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள சீக்கியர்கள் இச்சம்பவத்தைக் கண்டித்து அங்கு போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அமெரிக்க அரசிடம் இந்த வன்முறைச் சம்பவம் தொடர்பாக தனது ட்விட்டர் பக்கதின் மூலம் விளக்கம் கேட்டுள்ளார்.

இதனிடையே, சீக்கிய மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் இனவெறி காரணமாக ஏற்பட்டது அல்ல. மாறாக பள்ளி வகுப்பறையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் நடந்ததாக அந்தப் பள்ளியின் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com