அமெரிக்கா, சீனா இடையே 19 புதிய ஒப்பந்தங்கள் 

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே புதிதாக 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அமெரிக்கா, சீனா இடையே 19 புதிய ஒப்பந்தங்கள் 

நவம்பர் 3-ந் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு இரு நாட்டு உறவுகளின் மேம்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

மேலும் டிரம்பின் இந்த சீனா சுற்றுப்பயணத்தின் போது பெய்ஜிங்கில் 30 தொழில்நிறுவனங்கள் கலந்துகொண்ட சந்திப்பு நடைபெற்றது.

இதையடுத்து தனது ஆசிய சுற்றுப்பயணத்தை தொடரும் டிரம்ப், வியட்நாம், பிலிஃபைன்ஸ், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்றார்.

இந்நிலையில், அமெரிக்கா மற்றும் சீனா இடையே புதிதாக 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பயோ ஸைன்ஸ், விமானத்துறை மற்றும் நவீன உற்பத்தித்துறை உள்ளிட்ட துறைகளின் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இந்த 19 பிரிவுகளின் துறைகளில் 9 பில்லியன் டாலர்கள் அளவுக்கு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சீன பொருளாதார நிபுணர் வாங் யாங் மற்றும் அமெரிக்க பொருளாதாரத்துறை செயலர் வில்பர் ராஸ் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தாகின.

இது இரு நாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்தவும், புதிய நல்ல திட்டங்களை செயல்படுத்தவும் முன்மாதிரியாக அமையும் என இருநாடுகளின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com