பொழுதுபோகாததால் விஷ ஊசி போட்டு 106 நோயாளிகளை கொன்ற செவிலியர்!

ஜெர்மனை சேர்ந்த செவிலியர் ஒருவர் சாகும் தருவாயில் இருந்த நோயாளிகளுக்கு விஷ ஊசி பயன்படுத்தி 106 பேரை கொலை செய்துள்ளார்.
பொழுதுபோகாததால் விஷ ஊசி போட்டு 106 நோயாளிகளை கொன்ற செவிலியர்!

ஜெர்மனை சேர்ந்த செவிலியர் ஒருவர் சாகும் தருவாயில் இருந்த நோயாளிகளுக்கு விஷ ஊசி பயன்படுத்தி 106 பேரை கொலை செய்துள்ளார்.

வடக்கு நகரமான பிரீமெனின் நகரில் டெல்மேன்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஜெர்மனை சேர்ந்த ஆண் செவிலியர் நீல்ஸ் ஹோகேல் (41), சாகும் தருவாயில் உள்ள நோயாளிகளுக்கு விஷ ஊசியை பயன்படுத்தி 106 பேரை உயிரிழக்கச் செய்துள்ளார். உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர் ஏற்கனவே 2015-இல் இரண்டு கொலைகள் மற்றும் நான்கு கொலை முயற்சிகளை செய்ததாக இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கபட்டு உள்ளது. கொலை செய்யப்பட்ட பல வழக்குகளுக்காக ஜூன் 2008 இல் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தொடர்ந்து நடத்தப்பட்டு வந்த விசாரணையில் செவிலியர் ஹோகேல் 900க்கும் மேற்பட்ட நோயாளிகளை கொலை செய்து உள்ளதாக புலன்விசாரணை போலீஸார் தெரிவித்துள்ளனர். 

ஆகஸ்ட் மாதத்தில் 90க்கும் அதிகமான நோயாளிகளைக் கொன்றதற்கான ஆதாரங்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்

இதனிடையே  16 நோயாளிகளின் சாவில் ஹோகேல் சம்பந்தபட்டிருப்பதாக வியாழக்கிழமை (நவ.9) போலீஸார் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து மேலும் விவரங்களை திரட்டி அடுத்த ஆண்டு துவக்கத்தில் ஹோகேல் மீது புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

சாகும் தருவாயில் இருக்கும் நோயாளிகளை காப்பாற்றினால், மருத்துவமனையில் தனக்கு மரியாதையும் புகழும் கிடைக்கும் என்று நம்பிய ஹோகேல்,  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு இதய செயலிழப்பு ஏற்படுத்தும் மருந்தை அதிக அளவில் அவர் செலுத்தி உள்ளார். அவ்வாறு செலுத்தப்பட்ட நோயாளிகளில் சிலரை மட்டுமே அவரால் காப்பாற்ற முடிந்துள்ளது. 

பலர் உயிரிழந்த போதும் தனக்கு புகழ் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஹோகேல் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த உயிரிழப்பு எண்ணிக்கை "ஜெர்மன் குடியரசின் வரலாற்றில் தனித்தன்மை வாய்ந்தது" என்று புலன்விசாரணை தலைமை போலீஸ் அதிகாரி ஷிமிட்  கூறியதுடன், ஹோகேல் நல்ல நிலையில் உள்ளவர்களையும் கொன்றுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது என கூறினார். 

1999 முதல் 2005 வரையான காலகட்டத்தில் ஹோகேல் பணிபுரிந்த இரண்டு மருத்துவமனைகளில் மொத்தம் 106 நோயாளிகளின் சாவுக்கு ஹோகேல் காரணமாகி உள்ளார் என்பதை போலீஸார் உறுதி செய்துள்ளனர். 

தற்போது மேலும் 5 உடல்களை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைக்கு உடுபடுத்தியுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் கொலை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹோகேல் பணியில் இருந்தபோது சந்தேகத்திற்கிடமான உயிரிழப்புகள் குறித்து விரைந்து செயல்பட தவறிய டெல்மேன்ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் உள்ள பல மூத்த மருத்துவ அதிகாரிகளிடமும் விசாரணைகள் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com