மியான்மர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆளில்லா விமானம்: செய்தியாளர்களுக்குச் சிறை

மியான்மர் நாடாளுமன்ற வளாகத்தின் மீது உரிய அனுமதி பெறாமல் ஆளில்லா விமானத்தை (டிரோன்) பறக்கவிட முயன்றதாக வெளிநாடுகளைச்

மியான்மர் நாடாளுமன்ற வளாகத்தின் மீது உரிய அனுமதி பெறாமல் ஆளில்லா விமானத்தை (டிரோன்) பறக்கவிட முயன்றதாக வெளிநாடுகளைச் சேர்ந்த 2 செய்தியாளர்கள் உள்பட 4 பேருக்கு 2 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 சிங்கப்பூரைச் சேர்ந்த லா ஹன் மெங், மலேசியாவைச் சேர்ந்த மே சாய் லின் ஆகிய இரு செய்தியாளர்களும், மியான்மரின் நாடாளுமன்ற கட்டடத்துக்கு மேல் ஆளில்லா விமானத்தை பறக்கவிட முயற்சி செய்ததாக கடந்த மாதம் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
 அவர்களுக்கு உதவியதாக மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். இந்த 4 பேருக்கும் 2 மாதச் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆளில்லா விமானத்தை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக அவர்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றொரு வழக்கு வரும் 16-ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com