சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களை நிலைகுலையச் செய்யும் மிரட்டல்! 

சீனாவில் வசித்து வரும் கிறிஸ்தவர்கள் அரசின் நலத் திட்டங்களைப் பெற வேண்டுமானால், வீட்டில் இருக்கும் இயேசுவின் படத்தை நீக்கிவிட்டு, அதிபர் ஜின்பிங்கின் படத்தை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
சீனாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களை நிலைகுலையச் செய்யும் மிரட்டல்! 


பெய்ஜிங்: சீனாவில் வசித்து வரும் கிறிஸ்தவர்கள் அரசின் நலத் திட்டங்களைப் பெற வேண்டுமானால், வீட்டில் இருக்கும் இயேசுவின் படத்தை நீக்கிவிட்டு, அதிபர் ஜின்பிங்கின் படத்தை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதாக புகார் எழுந்துள்ளது.

மிகப்பெரிய மதசார்பற்ற நாடாக விளங்கும் சீனாவின் யுகான் மாகாணத்தில் உள்ள கிராமப் பகுதிகளில் இருக்கும் கிறிஸ்தவர்களின் வீடுகளில், அதிபர் ஷின் ஜின்பிங் படத்தை வைக்குமாறு அரசு அதிகாரிகள் வலியுறுத்தவதாகக் அந்நாட்டின் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதாவது, வீட்டினுள்ளும், வீட்டு வாயிலிலும் இருக்கும் இயேசு கிறிஸ்துவின் படத்தை எடுத்துவிட்டு, அங்கு அதிபரின் படத்தை வைக்காவிட்டால், அரசின் நலத் திட்டங்கள் கிடைக்காது என்று மிரட்டுவதாகவும், இயேசு கிறிஸ்து அவர்களை வறுமையில் இருந்தோ, நோய்களில் இருந்தோ காப்பாற்ற மாட்டார், அதிபர்தான் மக்களின் பிரச்னைக்கு தீர்வு காண முடியும் என்று அதிகாரிகள் கூறுவதாகவும் செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவல், சீனாவில் வெளியாகும் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் நாளிதழில் செய்தி வெளியாகியிருப்பதன் மூலம் உலகுக்கு தெரிய வந்துள்ளது.
 

அதே போல, தென்கிழக்கு சீனாவின் பல பகுதிகளில் வாழும் கிறிஸ்துவர்கள், தங்கள் வீடுகளில் இருந்து இயேசுவின் படத்தையும், சிலுவையையும் எடுத்துவிட்டு அதிபரின் படத்தை வைத்திருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் தகவல்கள் பரவி வருகிறது.

மதசார்பற்ற நாடாக இருக்கும் சீனாவில், தற்போது ஆளும் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள், மக்களிடம் இருக்கும் மத நம்பிக்கையை போக்கிவிட்டு, கட்சி நம்பிக்கையை மட்டும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டுவருவதற்கு இது ஒன்றே மிகப்பெரிய உதாரணமாக உள்ளது.

நிச்சயமாக மக்களுக்கு இயேசு கிறிஸ்துவின் புகைப்படத்தை எடுப்பதில் உடன்பாடு இருக்காது. ஆனால் வேறு வழியே இல்லை. அவர்களுக்குக் கிடைக்கும் நல உதவிகளையும், வறுமை நிவாரண நிதியையும் விட்டுக் கொடுக்க முடியாது என்று சவுத் சீனா மார்னிங் போஸ்ட் தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com