தலிபான் தொடர் தாக்குதல்: ஆப்கனில் 22 காவலர்கள் பலி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 22 காவலர்கள் பலியாகினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 22 காவலர்கள் பலியாகினர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காந்தஹார் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
காந்தஹார் மாகாணத்திலும் ஃபாரா மாகாணத்திலும் உள்ள காவல் துறையினரின் ஏராளமான சோதனைச் சாவடிகளில் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை இரவு முதல் தொடர் தாக்குதல் நடத்தினர். வாகனங்களில் வெடிபொருள் நிரப்பி சோதனைச் சாவடிகளில் மோதச் செய்தல், துப்பாக்கித் தாக்குதல், குண்டு வீச்சு, தற்கொலைத் தாக்குதல் உள்ளிட்ட முறைகளில் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் இருந்தன. 
இந்தத் தொடர் தாக்குதலில் 22 காவலர்கள் பலியாகினர். காவலர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 45 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பதினைந்து காவலர்கள் காயமடைந்தனர்.
முன்னதாக, திங்கள்கிழமை மாலை அமெரிக்க ராணுவ கவச வாகனத்தைக் குறி வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். வெடி பொருளை நிரப்பிய வாகனத்தை அமெரிக்க கவச வாகனத்தில் மோதியதில், அந்த வாகனம் சேதமடைந்தது. அமெரிக்க வீரர்கள் 4 பேர் காயமடைந்தனர். 
இரவு நேரத்தில் காவல் துறையினரின் சாவடிகளில் தாக்குதல் நடத்தியதிலிருந்து பயங்கரவாதிகளிடம் இரவில் துல்லியமாகக் காட்சி தெரிய உதவும் கருவிகள் இருந்திருக்கலாம் என்று கருத இடமிருக்கிறது என்றார் அவர்.
இந்தத் தாக்குதல்களுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
கடந்த சில வாரங்களாக காவல் துறை சோதனைச் சாவடிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க அமெரிக்காவிலிருந்து கூடுதல் ராணுவ வீரர்கள் வந்துள்ள நிலையில், பயங்கரவாதிகள் தங்கள் பலத்தைக் காட்டும் விதமாகத் தாக்குதல்களை அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.
காவல் துறையினரிடமிருந்து திருடிய வாகனங்களைப் பயன்படுத்தியே பயங்கரவாதிகள் பல தாக்குதல்களை நிகழ்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com