சிம் கார்டே இல்லாத அலைபேசி வழியாகவும் உங்கள் இருப்பிடத் தகவல்களை சேகரிக்கும் கூகுள்! 

தங்களது அலைபேசிகளில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தினை பயன்படுத்துபவர்களின் அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், அதன்மூலம் பயனாளர்களின் இருப்பிடத் தகவல்களை கூகுள் சேகரிக்கும்.. 
சிம் கார்டே இல்லாத அலைபேசி வழியாகவும் உங்கள் இருப்பிடத் தகவல்களை சேகரிக்கும் கூகுள்! 

சான் பிரான்சிஸ்கோ: தங்களது அலைபேசிகளில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தினை பயன்படுத்துபவர்களின் அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், அதன்மூலம் பயனாளர்களின் இருப்பிடத் தகவல்களை கூகுள் சேகரிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகம் முழுதும் அலைபேசி பயன்படுத்துபவர்கள் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம் (ஆப்பரேட்டிங் சிஸ்டம்) ஆண்ட்ராய்ட் ஆகும். இது பிரபல தேடுபொறி நிறுவனமான கூகிளின் தயாரிப்பாகும்.

இந்நிலையில் ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தினை பயன்படுத்துபவர்களின் அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், அதன்மூலம் பயனாளர்களின் இருப்பிடத் தகவல்களை கூகுள் சேகரிக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பிரபல தொழில்நுட்ப இதழான 'குவார்ட்ஸில்' நேற்று வெளியாகியிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நீங்கள் உங்கள் அலைபேசிகளில் இருப்பிட சேவையினை (லொகேஷன் சர்வீஸ்) அணைத்து வந்திருந்த பொழுதும், அல்லது உங்கள் அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், உங்களது இருப்பிடத் தகவல்களை ஆண்ட்ராய்ட் இயங்குதளமானது சேகரித்து, இணையத்தில் இணைக்கப்பட்ட உடனேயே   கூகுளுக்கு அனுப்புகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இவ்வாறு தகவல் சேகரிப்பதை கூகுள் நிறுவனமும் ஒப்புக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர், 'இவ்வாண்டு துவக்கத்தில் இருந்து குறுந்செய்திகளை அனுப்பும் வேகம் மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் பொருட்டு, அலைபேசிகளின் 'செல் அடையாள எண்களை' கூடுதல் சிக்னலாகப் பயன்படுத்துகிறோம்' என்று தெரிவித்திருந்தார்.

இதன்படி ஆண்ட்ராய்ட் செயலியானது நமது அலைபேசிகளில் இருப்பிட சேவையினை (லொகேஷன் சர்வீஸ்) அணைத்து வந்திருந்த பொழுதும், அல்லது அலைபேசிகளில் சிம் கார்டே இல்லாத பொழுதும், நமக்கு அருகில் உள்ள செல்போன் கோபுரங்கள் பற்றிய தகவல்களை சேகரித்து, கூகுளுக்கு அனுப்புகிறது.

இதன் காரணமாக நமது இருப்பிடம் உள்ளிட்ட பல தகவல்களை கூகிளால் பெற முடியும். அதே சமயம் நாம் விரும்பினாலும் அல்லது அலைபேசியினை 'பேக்டரி ரீசெட்' முறைக்கு மாற்றி வைத்தாலும் இதிலிருந்து விடுபட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com