ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு பாகிஸ்தான் அமைச்சருக்கு பயங்கரவாதி ஹபீஸ் சயீத் நோட்டீஸ்

ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு பாகிஸ்தான் அமைச்சருக்கு பயங்கரவாதி ஹபீஸ் சயீத் நோட்டீஸ்

பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது, ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு

லாகூர்: பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட ஜமாத் உத் தவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சையது, ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் காவாஜா அசீப்புக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் காவாஜா ஆசிப் பேசுகையில், 'ஹபீஸ் சையதும், ஹக்கானிஸ் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புகளும் பாகிஸ்தானுக்கு சுமையாக உள்ளன. ஆனால், அவர்களிடம் இருந்து விடுபட, பாகிஸ்தானிடம் போதிய 'சொத்து' இல்லை. பயங்கரவாதிகளை ஒழிக்க எங்களுக்கும் காலம் எடுக்கும். பாகிஸ்தானில் ஹக்கானிஸ் நெட்வோர்க் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்களுக்கு பாகிஸ்தான் உதவிசெய்கிறது என்று எளிதாக கூறிவிடலாம். ஹக்கானி நெட்வோர்க் மற்றும் ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதத்திற்காக எங்களை மட்டும் குறை கூறாதீர்கள். அதில் அமெரிக்காவிற்கும் பங்கு உள்ளது. 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு, அவர்களை அமெரிக்காவும் செல்லப்பிள்ளையாகவே பார்த்து வந்தது என்று கடுமையாக கூறினார். மேலும் வெள்ளை மாளிகையில் விருந்தும் வைக்கப்பட்டது என கூறினார். 

இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் காவாஜா அசீப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துடன் ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு வழக்குரைஞர் ஏ.கே. தோஹர் மூலம் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் விருந்து அருந்தியவர்களில் என்னுடைய கட்சிக்காரர் ஹபீஸ் சயீத்தும் ஒருவர் என கூறியது முற்றிலும் பொய், அவர் வெள்ளை மாளிகையின் அருகே கூட சென்று கிடையாது என கூறியுள்ளார். அவர் மதுபானம் அருந்தியதாக குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அவர் ஒயினை தொட்டது கூட கிடையாது. எனது கட்சிக்காரர் நபிகள் நாயகம் அவர்களின் கட்டளைகளைப் பின்பற்றி முஸ்லிம்களை நேசிப்பவர். அவர் மீது அமைச்சர் ஒருவர் இப்படி பேசியிருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. அமைச்சரின் பேச்சுக்கு பாகிஸ்தான் குற்றவியல் பிரிவின் (பிபிசி) 500- வது பிரிவின் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ஒரு அபராதம் விதிக்கப்படும் குற்றச்சாட்டுக்கு எதிரான குற்றச்சாட்டாகும். 

எனது கட்சிக்காரருக்கு பாக்கிஸ்தான் மட்டும் அல்ல உலகம் முழுவதும் உள்ள நற்பெயரை சேதப்படுத்தியதற்காக ரூ.10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தாக்கல் செய்யப்படும். மேலும் பாகிஸ்தான் குற்றவியல் பிரிவின் (பிபிசி) 500-வது பிரிவின் கீழ் உங்களுக்கு எதிராக குற்றவியல் புகாரை பதிவு செய்வதற்கான உரிமை எனது கட்சிக்காரருக்கு உள்ளது. அந்த முழு வழக்குக்கும் நீங்கள் பொறுப்பாளியாக இருப்பீர் எனவும் அமைச்சரின் பேச்சு சட்டப்படி தண்டிக்க கூடியது என தோஹர் கூறியுள்ளார்.

அந்த நேரத்தில் உள்துறை அமைச்சக அறிவிப்பின் படி, 1977-ஆம் ஆண்டின் பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் படி, லாகூரில் உள்ள அவரது இல்லத்தில் ஹபீஸ் சயீத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஹபீஸ் சயீத்தை விடுவித்தால் நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் என லாகூர் உயர்நீதி மன்றத்தில் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com