2017-ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிப்பு!

மூலக்கூறுகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்தமைக்காக 2017-ஆம் ஆண்டு  மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிப்பு!

ஸ்டாக்ஹோம்: மூலக்கூறுகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்தமைக்காக 2017-ஆம் ஆண்டு  மருத்துவத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு மருத்துவதுறைக்கான நோபல் பரிசுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், நோபல் பரிசுக் குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அதனை அறிவித்தார்.

இந்த ஆண்டுக்கான மருத்துவதுறை நோபல் பரிசினை உடலின் உயிர்க் கடிகாரம் என்று அழைக்கப்படும் 'பயலாஜிக்கல் க்ளாக்' ஆனது பிரபஞ்ச இயக்கத்திற்கான செயல்பாடுகளுடன் ஒத்து அமைந்துள்ளது என்பதனை காட்டும் அடிப்படை மூலக்கூறுகளின் செயல்பாடுகளைப் பற்றி ஆய்வு செய்தமைக்காக மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

ஜெப்ரி ஹல், மைக்கேல் ரோஸ்பேஷ் மற்றும் மைக்கேல் யங் ஆகிய மூவரே அந்த விருதினை பெறுபவர்களாவார்கள். விருதுத் தொகையான ரூ.7 கோடி இவர்கள் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com