2017-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிப்பு!

ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்தமைக்காக 2017-ஆம் ஆண்டு  இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2017-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிப்பு!

ஸ்டாக்ஹோம்: ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்தமைக்காக 2017-ஆம் ஆண்டு  இயற்பியலுக்கான நோபல் பரிசு மூவருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு இயற்பியல் துறைக்கான நோபல் பரிசுகள் சற்று முன்பு அறிவிக்கப்பட்டுள்ளன.ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில், நோபல் பரிசுக் குழுத் தலைவர் தாமஸ் பெர்ல்மன் அதனை அறிவித்தார்.

இந்த ஆண்டுக்கான இயற்பியல் துறை நோபல் பரிசினை ரெய்னர் வைஸ், பெரி பேரிஸ்  மற்றும் தோர்ன் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் பெற உள்ளனர். விருதுத் தொகையான ரூ.7 கோடி இவர்கள் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது

சரியாக 100 ஆண்டுகளுக்கு உலகப்புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐன்ஸ்டீன்  ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பு பற்றிய தனது கருத்தாக்கத்தினை முன்வைத்தார். அப்பொழுது அது பற்றிய ஆய்வு, நிரூபணங்கள் எதுவும் இல்லை. ஆனால் தற்பொழுது மேலே கூறிய மூன்று விஞ்ஞானிகளும் இது பற்றிய ஆய்வுகளை செய்து ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com