கயிற்றுக் கட்டிலின் விலை ரூ.50,000-க்கும் மேல்! எங்கு தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் கயிற்றுக் கட்டிலின் விலை ரூ.50,000-க்கும் மேல் என்றால் நம்ப முடிகிறதா...!
கயிற்றுக் கட்டிலின் விலை ரூ.50,000-க்கும் மேல்! எங்கு தெரியுமா?

இந்தியாவில் மிகவும் பழமையான மற்றும் பாரம்பரியமான பொருட்களில் ஒன்றாக கயிற்றுக் கட்டில் திகழ்கிறது.

நாட்டின் பல்வேறு இடங்களில் இவ்வகை கயிற்றுக் கட்டில்கள் பலருக்கு சிறுதொழில் வாய்ப்பாக அமைந்துள்ளது.

இன்று வரை இந்தியாவின் பல்வேறு இடங்களில் இவைகளை எளிதில் காண முடியும். தற்போதைய காலகட்டத்தில் குறிப்பாக கிராமங்களில் இன்றுவரை அதிகளவில் புழக்கத்தில் உள்ளது.

வீடுகளின் வெளிப்புறம் மற்றும் தோட்டங்களில் இவ்வகை கட்டில்களில் ஓய்வெடுப்பதை இன்றும் பலர் விரும்புகின்றனர்.

இந்நிலையில், இவ்வகை கட்டில்களின் விலை ரூ.50,000-க்கும் மேல் உயர்ந்துள்ளது என்றால் சற்று ஆச்சரியமாகத்தான் உள்ளது. ஆனால், இந்த நிலை இந்தியாவில் இல்லை என்பதே இதில் சற்று ஆறுதலான தகவல்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேனியல் ப்ளோர் என்பவர் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது இந்த கயிற்றாலான கட்டில்களை வடிவமைப்பது குறித்து பயிற்சி பெற்றுள்ளார்.

தற்போது இதனைப் பயன்படுத்தி தனது சொந்த நாட்டில் விற்பனையைத் துவங்கி விட்டார். அதற்கு அவர் செய்த விளம்பரம் தான் தற்போது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் பெரிதும் பகிரப்படுகிறது.

விவசாயிகளும், சிறு, குறு தொழில்கள் செய்பவர்கள் தங்கள் பொருட்களை சரிவர சந்தைப்படுத்துவதில் பல சிரமங்களைச் சந்தித்து வரும் இக்காலகட்டத்தில், இந்த கயிற்றுக் கட்டில் விற்பனை முறை சிறந்த முன் உதாரணம் என்றால் அது மிகையாகாது.

அந்த விளம்பரம் இதுதான்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com