வங்கதேசத்தில் 9 லட்சம் அகதிகளை தங்க வைக்க புதிய முகாம் அமைப்பு

ஒன்பது லட்சம் ரோஹிங்கயா அகதிகளைத் தங்க வைக்கும் விதமாகப் புதிய முகாமை வங்கதேச ராணுவம் அமைத்து வருவதாக அந்நாட்டு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

ஒன்பது லட்சம் ரோஹிங்கயா அகதிகளைத் தங்க வைக்கும் விதமாகப் புதிய முகாமை வங்கதேச ராணுவம் அமைத்து வருவதாக அந்நாட்டு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
தலைநகர் டாக்காவில் பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணத் துறை அமைச்சர் முஃபஸல் ஹுசேன் செளத்ரி இது தொடர்பாக செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
காக்ஸ் பஜார் மாவட்டம், குதுப்புலாங் பகுதியில் அகதிகளுக்கான மிகப் பெரிய முகாமை வங்கதேச ராணுவம் அமைத்து வருகிறது. ஏற்கெனவே இரண்டாயிரம் ஏக்கர் நிலம் இதற்காக ஒதுக்கப்பட்டது.
தற்போது மேலும் ஆயிரம் ஏக்கர் நிலம் அகதிகள் முகாமுக்காக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் புதிய முகாமில் 8 லட்சம் முதல் 9 லட்சம் அகதிகள் வரை தங்கலாம்.
மியான்மரையொட்டியுள்ள எல்லைப் பகுதியில் தற்போது 23 முகாம்கள் உள்ளன. அந்த முகாம்களிலும், பிற தாற்காலிக முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கயாக்கள் புதிய முகாமுக்கு மாற்றப்படுவார்கள். புதிய முகாம் செயல்படத் தொடங்கியதும் தற்போதுள்ள அனைத்து அகதி முகாம்களும் மூடப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com