அதானி நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய மக்கள்! 

ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் அதானி சுரங்கத் தொழில் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் ஆஸ்திரேலியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 
அதானி நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆஸ்திரேலிய மக்கள்! 

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியாவின் அதானி சுரங்கத் தொழில் நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் ஆஸ்திரேலியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

இந்தியாவின் சுரங்கத் தொழில் நிறுவனமான அதானி நிறுவனம் ஆஸ்திரேலியாவின் குயின்லாந்தில் மிகப்பெரிய (16.5 பில்லியன் டாலர்கள்) கார்மைக்கேல் சுரங்க திட்டத்திற்கு ஆஸ்திரேலியா அரசு கடந்த ஜூன் மாதம் ஒப்புதல் வழங்கியது. இது சுற்றுச்சூழல் மற்றும் நிதியியல் பிரச்சினைகள் தொடர்பாக தாமதமாகியுள்ளது.
 
இந்நிலையில், அதானியின் நிலக்கரி சுரங்கக் கட்டுமானத்துக்கு வடஆஸ்திரேலியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நிலக்கரி சுரங்கத்தால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும். பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் பாதிக்கும் என்று அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

அதானி நிறுவனத்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள போண்டி கடற்கரை, சிட்னி, பிரிஸ்பேன், மெல்போர்ன், கோல்ட் கோஸ்ட் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நிலக்கரி வெட்டி எடுக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்துமாறு கோஷங்கள் எழுப்பினர். ’Stop Adani', 'Adani go home' என்னும் பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. 
 
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க உறுதியளித்துள்ளதாகவும், ஆஸ்திரேலியாவின் பிராந்தியத்தில் இந்த திட்டத்திற்கு பெரும் ஆதரவு இருப்பதாக அதானி நிறுவனத்தின் ஆஸ்திரேலியா தலைமை நிர்வாக அதிகாரி ஜெயகுமார் ஜனகராஜ் கூறினார்.

இருப்பினும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இயற்கைக்கு பெரும் தடையாக வரும் நிறுவனங்களை மீட்பதற்கான சாத்தியமான தாக்கங்களைப் பற்றி கவலை கொண்டுள்ளனர், ஏனெனில் தேசிய அடையாளத்திற்கு அருகில் நிறுவப்படும் சுரங்கத் தொழில் நிறுவனத்தின் மூலம் நிலக்கரி எரிக்கப்படுவது காலநிலை மாற்றத்திற்கு பங்களிப்பதாக உள்ளது, இது இயற்கையின் பாறைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com