தாலிபான் அமைப்பால் கடத்தப்பட்ட தம்பதி 5 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு

தாலிபான் பயங்கரவாத அமைப்பால் கடத்தப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி 5 ஆண்டுகளுக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டனர். 
தாலிபான் அமைப்பால் கடத்தப்பட்ட தம்பதி 5 ஆண்டுகளுக்குப் பின் மீட்பு

கனடாவைச் சேர்ந்த ஜாஷ் போயல், அமெரிக்காவைச் சேர்ந்த கேய்ட்லேன் கோல்மேன் தம்பதி கடந்த 2012-ம் ஆண்டில் ஆஃப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அச்சமயம் தாலிபான் பயங்கரவாத அமைப்பால் இவர்கள் இருவரும் கடத்தப்பட்டனர். அப்போது கேய்ட்லேன் 7 மாத கர்பிணியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க உளவுப்பிரிவு மற்றும் பாகிஸ்தான் அதிரடிப்படை கூட்டு முயற்சியில் இதுபோன்று கடத்தப்பட்ட பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

இதன் ஒரு நடவடிக்கையாக நடந்த தேடுதல் வேட்டையின் போது பாகிஸ்தானின் குர்ரம் எல்லைப் பகுதியில் கடத்தப்பட்ட தம்பதி தங்களின் மூன்று குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் அக்டோபர் 11-ந் தேதி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதையடுத்து மீட்கப்பட்ட அனைவரும் தங்கள் தாய் நாடுகளுக்கு பத்திரமாக திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com