விளாதிமர் புதினுக்கு நாய்க்குட்டி பரிசு: வழங்கியது யார், ஏன் தெரியுமா?

ரஷிய அதிபர் விளாதிமர் புதினுக்கு 65-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாய்க்குட்டி பரிசு அளிக்கப்பட்டது.
விளாதிமர் புதினுக்கு நாய்க்குட்டி பரிசு: வழங்கியது யார், ஏன் தெரியுமா?

ரஷிய அதிபர் விளாதிமர் புதின், அக்டோபர் 7-ந் தேதி தனது 65-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையடுத்து அவருக்கு உலகத் தலைவர்கள் பலர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இந்நிலையில், பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் விளாதிமர் புதினுக்கு தனது வாழ்துகளுடன் இணைந்த அன்புப் பரிசாக நாய்க்குட்டி ஒன்றை துருக்மெனிஸ்தான் நாட்டு அதிபர் பரிசளித்துள்ளார்.

பரிசாக அளிக்கப்பட்ட அந்த நாய்க்குட்டியுடன் விளாதிமர் புதின், அந்த மேடையிலேயே சிறிது நேரம் கொஞ்சி, விளையாடி மகிழ்ந்தார். அதற்கு ரஷிய மொழியில் 'வெர்னி' (நம்பிக்கை) என்று பெயர் சூட்டினார்.

ரஷிய அதிபர் விளாதிமர் புதின், செல்லப்பிராணிகளை விரும்பி வளர்ப்பவர். அவ்வகையில் ஏற்கனவே அவரிடம் இரண்டு நாய்க்குட்டிகளை இதுபோன்று பரிசாகப் பெற்று வளர்த்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் குதிரைகள் மற்றும் ஒரு புலியைக் கூட வளர்த்து வருகிறார்.

முன்னதாக, துருக்மெனிஸ்தான் நாட்டில் இருந்துதான் ரஷியாவுக்கு எரிவாயு வழங்கப்பட்டு வந்தது. பின்னர் நடைபெற்ற பணப்பரிமாற்றம் காரணமாக அவர்களிடம் இருந்து எரிவாயு பெறுவதை ரஷியா கடந்த வருடம் நிறுத்தியது.

இதையடுத்து, இரு நாட்டு உறுவுகளையும் மேம்படுத்தும் நோக்கத்தோடு துருக்மெனிஸ்தான் அதிபர், ரஷியா சென்று அந்நாட்டு அதிபர் விளாதிமர் புதினை அவரது பிறந்தநாளன்று சந்தித்து வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் இந்த நாய்க்குட்டியையும் பரிசளித்தார்.

இதில் நடந்த பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு உறுவுகளும் சுமூகமாக நடைபெறும் விதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ரஷியா மீண்டும் தங்களுடனான எரிவாயு ஒப்பந்தத்தை மீண்டும் புதுப்பிக்கும் என்று துருக்மெனிஸ்தான் எதிர்பார்க்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com