அமெரிக்க எம்.பி.க்கள் குழு அக்.15-இல் இந்தியா வருகை

இணையதளப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆய்வுத் துறைகளில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, அமெரிக்க எம்.பி.க்கள் குழு அடுத்த வாரம் இந்தியா வருகிறது.

இணையதளப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆய்வுத் துறைகளில் இந்தியா - அமெரிக்கா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த, அமெரிக்க எம்.பி.க்கள் குழு அடுத்த வாரம் இந்தியா வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 11 அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 15) முதல் இந்தியாவில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.
அறிவியல், விண்வெளி மற்றும் தொழில்நுட்பத்துக்கான அமெரிக்க நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவர் லாமர் ஸ்மித் தலைமையிலான இந்தக் குழு, தில்லி மற்றும் பெங்களூரு நகரங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இணையதளப் பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆய்வத் துறைகளில் இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்
படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தும்.
இந்தக் குழுவில், தனா ரோஹ்ரபாஷெர், மோ புரூக்ஸ், எமி பேரா, தாமஸ் மாசீ, பிரையான் பாபின், பார்பரா காம்ஸ்டாக், மார்க் சான்ஃபோர்டு, டாரென் சோடோ ஆகிய எம்.பி.க்கள் இடம் பெற்றுள்ளனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com