விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவுடன் ஒப்பந்தம்

விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவுடன் நீண்டகால நோக்கில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

விமானப் போக்குவரத்துத் துறையில் இந்தியாவுடன் நீண்டகால நோக்கில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஐரோப்பிய யூனியனின் துணை அமைப்பான ஐரோப்பிய ஆணையத்தின் போக்குவரத்துப் பிரிவு இயக்குநர் ஹென்றிக் ஹோலோயி சிங்கப்பூரில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசியதாவது:
பொது விமானப் போக்குவரத்துத் துறையைப் பொருத்தவரை, இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இடையே நீண்டகால நோக்கிலான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியம் ஆகும்.
அந்த ஒப்பந்தங்களில், விமானப் போக்குவரத்து நிர்வாகத்தை நவீனப்படுத்துவது, போக்குவரத்துக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை நெறிப்படுத்துவது, சுற்றுச் சூழல் பாதுகாப்பு போன்ற அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
தில்லியில் கடந்த வாரம் நடைபெற்ற இந்திய - ஐரோப்பிய யூனியன் மாநாட்டுக்குப் பிறகு, இருதரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட பொது விமானப் போக்குவரத்து ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. போக்குவரத்துக்கான ஐரோப்பிய ஆணையர் இந்தியாவில் வரும் டிசம்பர் மாதம் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, இரு தரப்பு ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு ஒத்துழைப்பை அதிகரிப்பதன் மூலம், இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் மேலும் சிறந்த முறையில் சேவைகளை அளிக்க முடியும் 
என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com