"சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் மீறுகிறது'

வல்லரசு நாடுகளுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை ஈரான் மீறி வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
"சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தை ஈரான் மீறுகிறது'

வல்லரசு நாடுகளுடன் ஏற்படுத்திய ஒப்பந்தத்தை ஈரான் மீறி வருகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
ஆக்கப்பூர்வமான பயன்பாட்டுக்கு மட்டும் அணு ஆராய்ச்சியில் ஈரான் ஈடுபடலாம் என்று வல்லரசு நாடுகளுடன் கடந்த 2015}ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஏவுகணை சோதனை உள்ளிட்டவற்றில் ஈரான் ஈடுபடக் கூடாது. ஆனால் அந்த நாடு ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும், அந்நாட்டின் அணு ஆராய்ச்சி மையங்களை சர்வதேச அணுசக்தி கண்காணிப்பு அமைப்புகள் பார்வையிட அனுமதி மறுத்துவருகிறது. இதையடுத்து, உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறும் என்றும் ஈரானுக்கு எதிராகப் புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்போம் என்றும் டிரம்ப் கூறி வருகிறார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை அவர் ஆற்றிய உரையில் குறிப்பிட்டது: கடந்த 1979}ஆம் ஆண்டு ஈரானில் ஆட்சியைப் பிடித்த ஒரு மதவெறிக் கூட்டம் இப்போதும் அதிகாரத்தில் இருக்கிறது. அந்த நாடு மத்திய கிழக்கு நாடுகளிலும் உலகின் பிற இடங்களிலும் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. உலகெங்கும் அழிவையும் குழப்பத்தையும் பரப்பி வருகிறது. அந்த நாடு அணு ஆயுதத் திறன் பெறக் கூடாது. அதைப் பெறுவதற்கான முயற்சிகளை அமெரிக்கா தொடர்ந்து முடக்கும்.
அணு ஆராய்ச்சி தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தை மீறி பல நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. ஒப்பந்த விதிமுறைகளை ஈரான் மீறவில்லை என்று என்னால் அமெரிக்க நாடாளுமன்றத்துக்குத் தொடர்ந்து சான்று அளிக்க முடியாது. தற்போதைக்கு அந்த உடன்படிக்கை பரிசீலனையில் இருந்து வருகிறது. அதிபர் என்னும் முறையில் அந்த ஒப்பந்தத்தை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்ய முடியும். ஈரானின் செயல்களுக்கு அமெரிக்க நாடாளுமன்றமும் நட்பு நாடுகளான பிற வல்லரசுகளும் உத்தரவாதம் அளித்தால் ஒப்பந்தத்தை நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்வேன்.
பயங்கரவாதத்துக்குத் துணை போகும் அந்த நாட்டின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நிதித் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். அந்த அமைப்பு தொடர்பான நபர்கள், சர்வதேசக் கணக்குகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஈரானின் சர்வாதிகாரப் போக்கை கூர்மையாகக் கண்காணித்து, தெளிவான முடிவை எடுத்துள்ளேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com